Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”எல்லாருக்கும் காலம் வரும்” தமிழின் பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்!

Advertiesment
”எல்லாருக்கும் காலம் வரும்” தமிழின் பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்!
, வெள்ளி, 19 ஜூன் 2020 (13:03 IST)
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் பிரபலமாக இருந்த பாடகர்களில் ஒருவர் ஏ.எல்.ராகவன். 1950ம் வருடம் ”கிருஷ்ண விஜயம்” என்ற படத்தின் மூலம் தனது முதல் பாடலை பாடி திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களுக்கும் பாடியுள்ளார். பழம்பெரும் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.வி, ராமமூர்த்தி, டி.ஆர்.பாப்பா, சுதர்சனம் மாஸ்டர் உள்ளிட்டோரின் இசையில் பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்துள்ளார்.

”எல்லாருக்கும் காலம் வரும்”, “அன்று ஊமை பெண்ணல்லோ”, “ஒன்ஸ் அ பாப்பா” போன்ற பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ள இவர் சினிமா துணை நடிகை எம்.என்.ராஜம் அவர்களை திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மங்காத்தா அஜித் ஸ்டைலில் மாஸ் காட்டும் சென்றாயன் - கலக்குறீங்க பாஸ்!