Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

WWE பிரபலம் அண்டர்டேக்கர் ஓய்வு: ’’ரிங்கிற்குள் திரும்பி வர விருப்பமில்லை’’ என அறிவிப்பு

Advertiesment
WWE பிரபலம் அண்டர்டேக்கர் ஓய்வு: ’’ரிங்கிற்குள் திரும்பி வர விருப்பமில்லை’’ என அறிவிப்பு
, செவ்வாய், 23 ஜூன் 2020 (15:24 IST)
WWE எனப்படும் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று உலகப்புகழ் பெற்றதி அண்டர்டேக்கர்' தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

’’ரிங்கிற்குள் திரும்பி வர விருப்பமில்லை’’ என தி அண்டர்டேக்கர் கூறியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பற்றி புகழ்ந்து வருகின்றனர்.

மார்க் கால்வே என்ற நிஜப்பெயரை கொண்ட 55 வயதான தி அண்டர்டேக்கர், சமீபத்தில் வெளியான ஒரு ஆவணப்படத்தில் தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 30 ஆண்டுகளாக WWE போட்டியில் பங்கேற்றுள்ளார். ’தி டெட்மேன்’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து, ‘தி லாஸ்ட் ரைட்’ எனும் ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது.

ஆனால், தி அண்டர்டேக்கரோ அல்லது WWE நிர்வாகமோ அதிகாரபூர்வமாக ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

சமீபத்தில் தனக்கும், ஏ.ஜே ஸ்டைல்ஸுக்கு இடையே நடந்த WWE போட்டி குறித்தும் தி அண்டர்டேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் முடிவில் ஏ.ஜே ஸ்டைல்ஸை புதைத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் தி அண்டர்டேக்கர் கிளம்பிச் செல்வார்.

‘’அது ஒரு மிகச்சிறப்பான தருணம். ஒருவர் ஓய்வு பெறும்போது முழு திருப்தி கிடைக்க வேண்டும் என்றால், இதுபோன்றதொரு தருணம் கிடைக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.
webdunia

’’நான் ரிங்கிற்கு வெளியேதான் நிறைய நல்ல விஷயங்களைச் செய்துள்ளோன். அதை தொடர்ந்து செய்யும் இடத்திற்கு நான் இறுதியாக வந்துள்ளேன்’’ என கூறியுள்ளார் தி அண்டர்டேக்கர்.

கடைசியாக ஒரே ஒரு முறை போட்டியில் கலந்துகொள்வது குறித்து யோசித்து வருவதாகவும், ஆனால், அதற்கு காலம்தான் பதில் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்டர் டேக்கர் 3 முறை Heavy weight Champion, 6 முறை Tag Team Champion மற்றும் ராயல் ரம்புள் உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

1987-ம் ஆண்டு உலகத்தர சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டு தனது மல்யுத்த வாழ்க்கையை தி அண்டர்டேக்கர் துவங்கினார். பின்னர் 1990களில் இருந்து WWE போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

WWE போட்டிகளில் முன்னோடி என தி அண்டர்டேக்கர் அழைக்கப்படுகிறார். 1992-ல் நடந்த சவப்பெட்டியில் எதிராளியை வைத்து பூட்டும் போட்டி, 1996-ல் நடந்த உயிருடன் புதைக்கும் போட்டி போன்றவற்றின் முதல் போட்டிகளில் தி அண்டர்டேக்கர் பங்கேற்றுள்ளார்.

உலகம் முழுக்க இவர் மிகப்பிரபலமாக இருந்தாலும், தனது சகாக்களான ஜான் சீனா மற்றும் தி ராக் ஜான்சன் போல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இல்லை.

‘’திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை’’ என கடந்த மாதம் பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

’’திரைத்துறை எனக்குச் சரிவராது. மல்யுத்தம் மற்றும் WWE குறித்துத்தான் எனது முழு எண்ணமும் உள்ளது. இதற்காகவே எனது நேரத்தைச் செலவிட விரும்புகிறேன்;’’ என்றார் அவர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்திலிருந்து இறங்கிய அலறியடித்து ஓடிய பயணிகள்: கொரோனா ஏற்பட்ட அச்சமா?