தெற்கு ஜெர்மனியில் ஒரு சீஸ் கடையிலிருந்து துர்நாற்றம் வருகிறது என்பதை குறிக்கும் வகையில் அபாய பலகை வைக்க அனுமதி கோரி ஒரு பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
மனுவேலா க்ரேக்லெர் என்னும் அப்பெண் முனிச்சின் தெற்கு பகுதியில், ஒரு சீஸ் கடையின் மேல் வசித்து வருகிறார். சீஸ் கடைக்காரருக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் 2016 ஆம் ஆண்டு தொடங்கி இது தொடர்பாக பிரச்சனை நிலவி வந்தது.
"அந்த சீஸ் கடையின் துர்நாற்றம் தொந்தரவாக உள்ளது என்றும், அங்கிருந்து துர்நாற்றம் வீசுகிறது என்றும், க்ரேக் தொடர்ந்து தெரிவிக்கலாம் அது அவரின் உரிமை," என நீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும் அபாய பலகை வைக்க தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
தான் தொடர்ந்து அந்த சீஸ் கடையின் துர்நாற்றம் குறித்து குரல் கொடுக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்த்து தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என க்ரேக்லெர் தெரிவித்தார். அந்த சீஸ் கடையின் துர்நாற்றம் ஜன்னல்களின் வழியாகவும், படிகட்டுகளின் வழியாகவும், ப்ளக் பாயிண்டுகள் மூலமாகவும் வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் அந்த கடையின் உரிமையாளர், மூக்கு போன்ற ஸ்டிக்கரும் அபாய குறி போன்ற ஸ்டிக்கரும் கடையின் வியாபாரத்தை கெடுப்பதாக தெரிவித்தார். அந்த கடையில் 200க்கும் அதிகமான சீஸ்கள் சேமித்து வைக்கப்படும். அந்த கடையின் உரிமையாளர் அக்கம்பக்கத்தில் விவசாயம் செய்வதால் வருவதாக இந்த துர்நாற்றம் தெரிவித்தார்.