Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக டிரம்பால் நியமிக்கப்பட்ட தமிழர் - யார் இவர்?

அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக டிரம்பால் நியமிக்கப்பட்ட தமிழர் - யார் இவர்?
, புதன், 22 ஏப்ரல் 2020 (09:40 IST)
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட தமிழர்

அமெரிக்க அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக அமெரிக்கவாழ் இந்தியரான சுதர்சனம் பாபுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமன செய்தார் என்கிறது தினமணியின் செய்தி.

மதிப்புமிக்க ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தை சேர்ந்த சுதர்சனம் பாபுவை தேசிய அறிவியல் வாரியத்தின் உயர்நிலை உறுப்பினராக 6 ஆண்டு காலத்திற்கு நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகை திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

சுதர்சனம் பாபு 1988ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள ஐஐடியில் தனது எம்.டெக் படிப்பையும், இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பை 1986ஆம் ஆண்டு கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் மற்றும் உலோகவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தற்போது இடைநிலை ஆராய்ச்சி மற்றும் பட்டதாரி கல்விக்கான மையத்தின் இயக்குநராகவும், ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வத்தின் ஆளுநரின் மேம்பட்ட உற்பத்தித் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த மதிப்புமிக்க குழுவில் மூன்றாவது அமெரிக்கவாழ் இந்தியராக சுதர்சனம் பாபு நியமிக்கப்பட்டுள்ளார் என்று விவரிக்கிற

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோவின் பங்குகளை வாங்கிய பேஸ்புக்: இந்தியாவில் கால் பதிக்கும் ஸூக்கர்பெர்க்