Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூமியில் விழுந்த ஐரோப்பிய செயற்கைக்கோள் என்ன ஆனது?

satelite

Sinoj

, வியாழன், 22 பிப்ரவரி 2024 (21:38 IST)
பூமியின் தட்பவெப்பநிலையை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் பல தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்த ஐரோப்பிய செயற்கைக்கோள் பூமியில் விழுந்துள்ளது.
 
ERS-2 எனப்படும் இரண்டு டன் எடையுள்ள இந்த விண்கலம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே வளிமண்டலத்திலேயே எரிந்தது.
 
எனினும் இதை பூமியில் இருந்து யாரும் கண்டதாக இதுவரை தகவல் இல்லை.
 
ERS-2 என்பது வளிமண்டலம், நிலம் மற்றும் கடல்களை புதுமையான வழிகளில் ஆய்வு செய்வதற்காக 1990-களில் ஐரோப்பிய விண்வெளி முகமையால் தொடங்கப்பட்ட திட்டங்களுள் ஒன்றாகும்.
 
பூமியின் பாதுகாப்பு ஓசோன் படலத்தை மதிப்பிடுவதற்கான புதிய திறனை மேலும் ERS-2 விண்கலம் கொண்டிருந்தது.
 
செயற்கைக்கோள் கட்டுப்பாடற்ற வகையில் பூமியில் விழும் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான உந்துவிசை அமைப்பு இல்லை.
 
எனினும், ராடார்கள் விண்கலம் பூமியில் விழுவதைக் கண்காணித்தன. கலிபோர்னியாவிற்கு மேற்கே 2,000 கிமீ தொலைவில் அலாஸ்கா மற்றும் ஹவாய் இடையே வடக்கு பசிபிக் பெருங்கடலில் கிரீன்விச் நேரப்படி 17:17 மணிக்கு எரிந்துவிட்டதாக ஐரோப்பிய விண்வெளி முகமை கூறியிருக்கிறது.
 
அதன் பாகங்கள் ஏதும் பூமியின் தரைப்பகுதியிலோ, நீரிலோ விழுந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
 
தற்போது பூமியின் வெப்பநிலையை கண்காணிப்பதற்கு முன்னோடியாக இருந்தது ERS செயற்கைகோள்கள்தான்.
 
செயற்கைக்கோள்களுக்கு முன்னோடி
ஐரோப்பிய விண்வெளி முகமை 1990இல் ஒரே மாதிரியான இரண்டு தொலைதூர புவி கண்காணிப்பு (Earth remote sensing) செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. அவற்றின் பெயர் ERS-1 மற்றும் ERS-2.
 
அந்த சமயத்தில் இவைதான் அதிநவீன செயற்கைக்கோள்களாக பார்க்கப்பட்டது. இதில் நிலம், காற்று மற்றும் கடலை ஆராய்வதற்கான தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
 
இவை இரண்டும் வெள்ளத்தை கண்காணிப்பது, கடல் மற்றும் கண்டங்களின் வெப்பநிலையை அளவிடுவது, பனிக்கட்டிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பது மற்றும் பூகம்பத்தின் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்தன.
 
இதில், ERS-2 செயற்கைக்கோளுக்கு பூமியை சூரியனின் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் திறனும் இருந்தது.
 
இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களுக்கு முன்னோடிகள் என்று அழைக்கப்பட்டன. அதில் ஒன்றான ERS-2 செயற்கைக்கோள்தான் தற்போது முதலில் பூமியை நோக்கி விழுந்திருக்கிறது.
 
,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் புதிய விதிகளின்படி, விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்களை ஐந்தாண்டுகளுக்குள் பூமிக்கு கொண்டு வந்திட வேண்டும்.
 
 
இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ஏவப்பட்ட காலகட்டத்தில் செயலிழந்த செயற்கைகோள்களினால் விண்வெளியில் உருவாகும் மாசு குறித்து எந்த கடுமையான விதிமுறைகளும் இல்லை. செயலிழந்த செயற்கைக்கோள்களை 25 ஆண்டுகளுக்குள் மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது.
 
ஆனால், தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் புதிய விதிகளின்படி, விண்வெளியில் குப்பைகளை உருவாக்கக் கூடாது. செயலிழந்த செயற்கைக்கோள்களை ஐந்தாண்டுகளுக்குள் பூமிக்கு கொண்டு வந்திட வேண்டும்.
 
அதேபோல், எதிர்காலத்தில் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்களும் அதன் பணி முடிந்த பிறகு, பூமிக்கு மீண்டும் கொண்டு வரும் வகையில் கூடுதல் எரிவாயு நிரப்பி அனுப்ப வேண்டும்.
 
காரணம், உலகளவில் அதிக செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுவதால் அவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
 
ERS-2 செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து 780 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
 
ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் கண்காணிப்பு நிறுவனம் ERS-2வை கண்காணித்து வந்தது.
 
எஞ்சியிருந்த எரிவாயுவின் மூலம், இது 2011ஆம் ஆண்டு பூமிக்கு சற்று அருகில் 570 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
 
இதன் காரணமாக அந்த காலகட்டத்தில், இது கீழ் வளிமண்டலத்தில் நுழைந்து அடுத்த 15 ஆண்டுகளுக்குள் அழிந்து விடும் என்று மதிப்பிடப்பட்டது.
 
இந்த கணிப்பு கிட்டத்தட்ட சரி என்பது இன்று நிரூபணம் ஆக உள்ளது.
 
அதே சமயம், ERS-1 செயற்கைக்கோளையும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்றன. இதில் அதனுடனான தொடர்பு பாதியிலேயே அறுந்து விட்டது.
 
ERS-1 செயற்கைகோள் தற்போது பூமியிலிந்து 700 கிலோமீட்டர் மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. அது கீழே வந்து முழுமையாக அழிவதற்கு எப்படியும் 100 ஆண்டுகள் ஆகலாம்.
 
விண்வெளியை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்காக இயங்கி வரும் அமைப்பான செக்யூர் வோர்ல்டு ஃபவுண்டேஷன் மற்றும் அமெரிக்க நிறுவனமான லியோலேப்ஸ், விண்வெளியில் தொடர்ந்து குப்பைகள் அதிகரித்து வருவதால், அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளன.
 
அவர்களது கூற்றுப்படி, ஏற்கெனவே அங்கு அதிகளவிலான செயற்கைக்கோள்களால் உருவாக்கப்பட்ட குப்பைகள் சுற்றிக்கொண்டிருப்பதால், அவை உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான புதிய செயற்கைக்கோள்களை மோதி அழிக்க வாய்ப்புள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாசிசம் வீழட்டும் - இந்தியா வெல்லட்டும்- அமைச்சர் உதயநிதி!