Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கும் இணையம்'' : எச்சரிக்கும் உளவியல் வல்லுநர்

, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (10:53 IST)
அதிகளவிலான இணையவழி பாலியல் படங்களை பார்ப்பதால் இளம் ஆண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

 
18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருவதாகவும், இது பத்து ஆண்டுகளுக்கு முன், இளம் நோயாளிகளிடம் இல்லாத ஒன்று என்றும் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்ந்த ஏங்கெல்லா கிரகோரி தெரிவித்துள்ளார்.
 
கடந்த காலத்தில், ஆணுறுப்பு விறைப்பு, செயலின்மை பிரச்சினை காரணமாக மருத்துவமனைகளுக்கு வந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள், நீரிழிவு நோய், மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் உடல் இயக்கத் திறனை குறைக்கும் நோய் அல்லது இதய பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட வயதான ஆண்கள்தாம்.
 
இணையவழி மூலம் ஆபாசப் படங்களை பார்க்கக் கூடிய வசதி இப்போது எளிதாகக் கிடைப்பது சில பாலியல் உறவுகளை சேதப்படுத்துகிறது.
 
இந்த விஷயத்தில், இளம் ஆண்களின் மூளைகள் நிஜ பெண்களை மறந்து கணினிகளில் பார்க்கக் கிடைக்கும் படங்களோடு ஒன்றிவிடுவதே அதற்கு காரணமாகும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்று மாடல்களில் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம்