மூன்று மாடல்களில் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம்
மூன்று மாடல்களில் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம்
சாம்சங் நிறுவனத்தின் அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் கருவிகளை மூன்று வித மாடல்களில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.
சாம் மொபைல் எனும் இணையதளத்தில் இது குறித்த செய்தியை வெளியிட்டது. சாம்சங் நிறுவனத்தின் கியர் எஸ்3 (Gear S3) ஸ்மார்ட்வாட்ச் கருவி அடுத்த மாதம் நிடைபெற இருக்கும் ஐஎஃப்ஏ தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்ய உள்ளது. கிளாசிக் (Classic), ஃப்ராடன்டியர் (Frontier) மற்றும் எக்ஸ்ப்ளோரர் (Explorer) என மூன்று வித மாடல்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃப்ராடன்டியர் (Frontier) மற்றும் எக்ஸ்ப்ளோரர் (Explorer) மாடல்களில் அதிநவீன அம்சங்களைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதோடு கியர் எஸ்3 பில்ட்-இன் ஜிபிஎஸ்(Built in GPS), ஆல்டிமீட்டர்(Altimeter), பாரோமீட்டர்(Barrometer) மற்றும் ஸ்பீடோமீட்டர்(Speedometer) போன்றவகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சாம்சங் கியர் எஸ்3 வட்ட வடிவ திரை, மற்றும் டைஸன் இயங்குதளம் போன்றவை வழங்கப்படும் கூறப்படுகின்றது. மேலும் திரையில் மூன்று பட்டன்கள், ஷார்ட்கட் மற்றும் செயலிகளை இயக்க வழி செய்யும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்