Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுக்ரேன் போர்: ரஷ்யா துண்டாடப்படுமா? இந்தியாவின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

Ukraine war
, ஞாயிறு, 19 மார்ச் 2023 (00:12 IST)
மார்ச் 2000 இல், பிபிசி சீனச் சேவையைச் சேர்ந்த எனது சக செய்தியாளரும் நானும் மாஸ்கோவில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்திற்கு இரவு உணவிற்குச் சென்றோம். சில இளம் பெண்கள், ஒரு நாட்டுப்புற பாடலுக்கு நடனமாடி, மேஜை, மேஜையாக நகர்ந்து, பிறகு ஒரு மேஜையில் இருந்த ரஷ்ய இளைஞனை நடன தளத்திற்கு அழைத்து வந்தனர். அவருக்கு ராணுவ சீருடை அணிவித்தனர். அந்த நடனத்தின் கருத்தாக்கம் - போர் மற்றும் கிராமிய பாடல்கள் என சொல்லப்பட்டது.
 
அதாவது, ரஷ்ய வீரர்களின் துணிச்சலை வெளிப்படுத்தும் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை இந்த நடனங்கள். பாரம்பரிய கிராமத்து ஆடைகளை உடுத்தி, பழைய காலத்தில் செய்வது போல் சிறுவர்களை போருக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தனர் அந்த பெண்கள்.
 
பின்னர், ரஷ்ய நண்பர் ஒருவர் இந்த பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை எங்களிடம் விவரித்தார்.
 
ரஷ்யாவில், வீடுகள் மற்றும் கிராமங்களில் இருந்து இளைஞர்களை போர்க்களத்திற்கு அனுப்புவது தேசபக்தியின் சிறந்த செயல் என்று கூறினார். அந்த இளைஞர்கள் நாட்டுக்காக செய்யும் தியாகங்கள் இந்த நாட்டுப்புறக் கதைகளின் அங்கமாக இருக்கும்.
 
ரஷ்யாவின் பல மாகாணங்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து ராணுவத்தில் சேர்ந்தவர்கள், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்கள். அவர்களின் பிரதிபலிப்பை இந்த கதைகளில் காணலாம்.
 
ரஷ்ய ராணுவத்துடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான ரஷ்யர் அல்லாத இன சமூகங்கள் போராடுகின்றன. யுக்ரேனில் ராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அதிபர் விளாதிமிர் புதினின் புகழ் ரஷ்யாவில் உயர்ந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக செச்சனியாவில் பிரிவினைவாதக் கிளர்ச்சியை நசுக்குவதற்கான அவரது பிரபலத்தைப் போலவே இப்போதும் அவரது புகழ் ஓங்கியிருக்கிறது.
 
 
உண்மையில் நாங்கள் 2000ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் செய்திகளை சேகரிக்கவே அப்போது ரஷ்யா சென்றிருந்தோம். செச்சனியாவில் கிளர்ச்சியை நசுக்கிய பின்னர் விளாதிமிர் புதின் ஒரு தேசிய நாயகன் ஆகி விட்டார்.
 
மேலும் அவர் அதிபராக தேர்வாகி விடுவார் என்பதும் முன்பே கணிக்கப்பட்டதாக இருந்தது. அதை மெய்ப்பிப்பது போலவே புதின் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது புதினின் விமர்சகர்கள், நாட்டில் ஜனநாயகம் பின்வாங்குவதாகவும், அவர் ஒரு சர்வாதிகாரியாக மாறிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.
 
கடந்த ஆண்டு பிப்ரவரியில் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, புதினின் ராணுவ நடவடிக்கை தற்கொலை என்று நிரூபிக்க முடியும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ரஷ்ய நிபுணர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, யுக்ரேனில் ஏற்பட்ட அனுபவத்துக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, 1991இல் சோவியத் யூனியன் சிதைந்ததைப் போலவே உடைந்து போகக்கூடும்.
 
ரஷ்ய விவகார நிபுணரும் எழுத்தாளருமான ஜானுஸ் புகாஜ்ஸ்கி கடந்த ஆண்டு பிற்பகுதியில் 'Failed State: A Guide to Russia's Rupture' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
 
அதில் அவர், "விளாதிமிர் புதின் ரஷ்யாவின் சிதைவுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் அதைத் தடுக்க அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இப்போது அவர் நாட்டின் வீழ்ச்சிக்காக சிறப்பாக நினைவுகூரப்படலாம்," என கூறியுள்ளார்.
 
ரஷ்ய கூட்டமைப்பை துண்டு துண்டாக உடைத்து சிறிய நாடுகளாக பிரிக்க முயற்சிப்பதாக கடந்த ஓராண்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் நேட்டோ மீது ரஷ்ய அதிபர் புதின் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
 
கடந்த மாத இறுதியில், Rossiya என்ற அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், அதிபர் புதின் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியிலிருந்து சதி நடந்து வருவதாகக் கூறினார்.
 
ஆனால் ஒருபுறம் ரஷ்யாவை துண்டு துண்டாக உடைப்பதாக மேற்கத்திய நாடுகளை குற்றம்சாட்டிக் கொண்டிருக்கும் அதிபர், மறுபுறம் தனது நாட்டின் அளவை அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் சுவாரசியமான விடயம்.
 
கடந்த ஆண்டு செப்டம்பரில், மாஸ்கோவில் நடந்த வண்ணமயமான விழாவில், டோன்யூட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா ஆகிய நான்கு யுக்ரேனிய மாகாணங்களை அதிபர் புதின் ரஷ்யாவில் இணைத்தார். இந்த மாகாணங்களில் "வாக்கெடுப்பு" என்று அழைக்கப்படும் நடைமுறைக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். இதேபோன்ற "வாக்கெடுப்பு" 2014இல் நடத்தப்பட்டு கிரைமியாவும் 'சட்டவிரோதமாக' இணைக்கப்பட்டது.
 
ரஷ்ய கூட்டமைப்பின் எல்லைகள் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கு ஆசியா வரை மற்றும் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய நாடாகும். ஆனால் அதன் 15 கோடி மக்கள்தொகை கிட்டத்தட்ட பிகார் மாநிலத்திற்கு சமம்.
 
ரஷ்யாவின் பொருளாதாரம் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. முதல் ரஷ்ய கூட்டமைப்பு 83 பிராந்தியங்கள், மாநிலங்கள், நகரங்கள் மற்றும் மாகாணங்களைக் கொண்டிருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில், ரஷ்யர் அல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் 21 மாகாணங்கள் உள்ளன.
 
ஜோனாதன் பெர்ல்மேன் "ஆஸ்திரேலிய வெளியுறவு" பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் அவரது நாட்டில் மூத்த பத்திரிகையாளர்.
 
“ரஷ்ய கூட்டமைப்பை அழிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக எந்த அறிகுறியும் இல்லை. புதின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் யுக்ரேனை ஆக்கிரமித்தார். அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இப்போது யுக்ரேனுக்கு ஆதரவை வழங்குகின்றன. இது யுக்ரேனை பாதுகாக்கும். இது யுக்ரேன் பிரதேசத்தை ரஷ்யா கைப்பற்றுவதையும் பராமரிப்பதையும் தடுப்பதை அடிப்படையாகக் கொண்டது," என்கிறார் ஜோனாதன்.
 
அஜய் பட்நாயக் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியராக உள்ளார்.
 
பிபிசி இந்தி உடனான உரையாடலில், ரஷ்யாவை பிளவுபடுத்த முடியாது என்று அவர் கூறினார்.
 
"ரஷ்யா உடைந்து போவதற்கு சொந்த நாட்டிலேயே ஒரு போர் இருக்கிறது. அதை தோற்கடித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். வியட்நாம் போரில் தோல்வியடைந்த பிறகு அமெரிக்கா சிதறவில்லை. போரை இழந்த பிறகு தலைமை மாறலாம். ரஷ்யா இழக்க வாய்ப்பில்லை. போர் முற்றுப்புள்ளி கட்டத்தை எட்டினாலோ சில பகுதிகளில் ரஷ்யா தோற்றாலோ கூட அது அந்நாட்டை பாதிக்காது," என்கிறார் அவர்.
 
பேராசிரியர் பட்நாயக்கின் கருத்துப்படி, ரஷ்யாவில் தலைமை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அவர், "இதற்கு பல காரணங்கள் உள்ளன. ரஷ்யாவிற்குள் போர் நடக்கவில்லை. ரஷ்யாவிற்கு பிராந்திய இழப்பு ஏற்பட்டாலும் யுக்ரேனில்தான் அது நடக்கும். மற்றபடி ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அங்கு பொருளாதார நெருக்கடி இல்லை. ஆம், ரஷ்ய வீரர்கள் அதிக அளவில் இறக்கத் தொடங்கினால், நாட்டில் போராட்டங்கள் வரலாம். அதன் காரணமாக தலைமை மாறலாம். மூன்றாவது காரணம், யுக்ரேனில் இருந்து ரஷ்யா வந்த அகதிகளின் எண்ணிக்கை 27 லட்சம் ஆக உள்ளது. இந்த நேரத்தில் யுக்ரேனில் இருந்து வந்த அகதிகளில் ரஷ்ய மொழி பேசுபவர்கள் மற்றும் ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அதன் நாகரிகத்துடன் தொடர்புடையவர்கள். இவர்கள் புதினுக்கு ஆதரவாக உள்ளனர்," என்கிறார்.
 
மூத்த பத்திரிகையாளர் ஜோனாதன் பெர்ல்மேன், இந்த கூற்றை ஒப்புக்கொள்கிறார். பிபிசிக்கு ஒரு மின்னஞ்சல் நேர்காணலில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்:
 
"ரஷ்யா போரில் தோல்வியுற்றால், அது புதினுக்கு அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் - இருப்பினும் அவருக்குப் பதிலாக யாரேனும் இருக்கிறார்களா என்பதை அறிவது கடினம். ஆனால், ரஷ்ய கூட்டமைப்பின் சரிவு சாத்தியமில்லை. ஒரு அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும் பொருளாதார சரிவை ரஷ்யா அனுபவிக்க வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்கது - ரஷ்ய எரிசக்தி விற்பனை வலுவாக உள்ளது. மேலும் அதன் பொருளாதாரம் சர்வதேச தடைகளை எதிர்கொண்டு ஒப்பீட்டளவில் நன்றாக உள்ளது," என்கிறார் அவர்.
 
அதிகாரம் மிக்கது கிரெம்ளின்
கிரெம்ளின்
பட மூலாதாரம்,GETTY IMAGES
மேற்கத்திய நாடுகளில் உள்ள ரஷ்ய நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த பரந்த நாட்டின் அதிகார மையம் இப்போது கிரெம்ளினில் மட்டுமே உள்ளது. கிரெம்ளினின் அனுமதியின்றி தொலைதூர மாகாணங்களில் கூட எதுவும் நடக்காது.
 
ஆனால் அமெரிக்க எழுத்தாளர் ஜானுஸ் புகாஜ்ஸ்கி, ரஷ்ய கூட்டமைப்பு ஒரு நடுங்கும் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது, யுக்ரேனில் நடந்த போரினால் அது மேலும் வலுவிழந்து எந்த நேரத்திலும் நொறுங்கலாம் என்ற நிலையில் இருக்கிறது என்கிறார்.
 
பிபிசி இந்தியிடம் பேசிய அவர், "ஒரு வலுவான அரசு என்ற பிம்பம் ரஷ்யாவின் பல பலவீனங்களை மறைத்துள்ளது. அவற்றை அகற்ற எதுவும் செய்யப்படவில்லை. யுக்ரேனில் நடந்து வரும் போரின் காரணமாக இந்த பலவீனங்கள் அதிகம் காணப்படுகின்றன. எனது புத்தகத்தில் பலவீனமான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட தேசிய அடையாளம் பலவீனமாக இருந்தாலும் தேசத்தை கட்டியெழுப்பினாலும், பொது சமூகமாக இருந்தாலும் இன சமூகமாக இருந்தாலும் - இவை அனைத்தும் கிரெம்ளினின் அதிகார மையத்தால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இது முன்பு கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது புதினின் கட்டுப்பாட்டில் உள்ளது," என்கிறார்.
 
"சோவியத் யூனியன் பிளவுபட்ட காலத்தில் இருந்து, மேற்கத்திய நாடுகள் ரஷ்ய கூட்டமைப்பை துண்டாக்க விரும்புகின்றன என்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கேட்டு வருகிறோம். ஆனால் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவின் எந்த தலைவரும் ரஷ்ய கூட்டமைப்பு பிளவுபடுவதை விரும்பவில்லை. இருப்பினும், ரஷ்ய கூட்டமைப்பின் சிதைவு பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்று வலியுறுத்தி வருபவர்களில் நானும் ஒருவன். இது அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பில் வாழும் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்," என்கிறார் ஜானுஸ் புகாஜ்ஸ்கி.
 
மைக்கேல் சி. கிம்மேஜ், வாஷிங்டனின் கத்தோலிக்க பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர், அமெரிக்க-ரஷ்யா உறவுகள் மற்றும் பனிப்போரின் வரலாறு ஆகியவற்றில் நிபுணர்.
 
2014 முதல் 2016 வரை அவர் ரஷ்யா மற்றும் யுக்ரேனில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் நிபுணராக இருந்தார்.
 
பிபிசி உடனான உரையாடலில், ரஷ்ய கூட்டமைப்பு துண்டு துண்டாக உடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று கூறுகிறார் அவர்.
 
“கடந்த 20 ஆண்டுகளில் புதின் வலுவான ராணுவ மற்றும் ரகசிய சேவை நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் சில சோவியத் யூனியனில் இருந்து அவர் பெற்றவை. இந்த நிறுவனங்கள் திடீரென சரிந்துவிட வாய்ப்பில்லை என்பது எனது பார்வை. ரஷ்யாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு வடக்கு காகசஸில் உள்ள தாகெஸ்தான், செச்னியா மாகாணங்களில் அல்லது தொலைதூர கிழக்கில் கூட ஒருங்கிணைந்த முயற்சிகள் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கான வலிமை ரஷ்யாவிடம் இருப்பதாகத் தோன்றுகிறது," என்கிறார் அவர்.
 
பேராசிரியர் மைக்கேல் கிம்மேஜ் ரஷ்ய கூட்டமைப்பு பிளவுபடும் சாத்தியக்கூறு மிகக் குறைவு என்று வாதிட்டார். ஆனால் அதே நேரத்தில், ஒரு வரலாற்றாசிரியராக இருப்பதால், ரஷ்ய பிளவுக்கான சாத்தியத்தை அவர் முழுமையாக நிராகரிக்கவில்லை.
 
பிபிசியிடம் பேசுகையில், "நிச்சயமாக இது சாத்தியம். நீங்கள் வரலாற்றில் கடைசி இரண்டு உதாரணங்களை பார்க்கலாம். முதல் உதாரணம் 1991இல் நடந்தது. ஆப்கானிஸ்தானில் சோவியத் தோல்வி சோவியத் வீழ்ச்சியை ஏற்படுத்தியது என்று நீங்கள் கூறலாம்," என்கிறார்.
 
சோவியத் உடைந்தது. அது மாஸ்கோவில் அரசாங்கத்தின் மாற்றம் மட்டுமின்றி உண்மையில் சோவியத் ஒன்றியம் 15 தனித்தனி சுதந்திர நாடுகளாகப் பிரிந்த வரைபடத்தை மீண்டும் எழுதத்தூண்டியது. ஆனால் நிச்சயமாக ஒரு சக்திவாய்ந்த உதாரணம் 1917இல் பதிவானது.
 
ரஷ்யா முதலாம் உலகப் போரில் முழுமையாக தோற்கடிக்கப்படவில்லை, ஆனால் அது பல சிரமங்களை சந்தித்தது. இது 1917 புரட்சிக்கு வழிவகுத்தது. அந்த புரட்சி ஒரு உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்காமல் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தின் முழுமையான சரிவாக இருநத்து. அதற்கு நிறைய சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன"
 
ரஷ்ய விவகார நிபுணரும் எழுத்தாளருமான ஜானுஸ்ஜ் புகாஜ்ஸ்கி, 1990களின் முற்பகுதியில் யூகோஸ்லாவியா உடைந்தது போன்ற ரஷ்யாவிற்கு வெளியே உள்ள நாடுகளின் உதாரணத்தையும் தருகிறார். அது படிப்படியாக சிதைந்தது என்கிறார் அவர்.
 
"இது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறையாக இருந்தது, ஆனால் குடியரசுகளில் இல்லை. வன்முறையைத் தூண்டிய இந்த மினி சாம்ராஜ்ஜியத்தை ஒன்றாகப் பிடிக்க பெல்கிரேட் (அதிகார மையம்) முயன்றது. முதல் உலக போரில் ஒட்டோமான் பேரரசு தோல்வியடைந்ததன் காரணமாக கூறப்படுகிறது. துருக்கி 1918 மற்றும் 1922 க்கு இடையில் பிளவுபட்டது.
 
ரஷ்ய விவகாரங்கள் பற்றிய நிபுணர்களின் கூற்றுப்படி, ரஷ்ய கூட்டமைப்பின் சரிவு தவிர்க்க முடியாதது. ஆனால் அது படிப்படியாக நடக்கும் என எழுத்தாளர் ஜானுஸ் புகாஜ்ஸ்கி பிபிசியிடம் கூறுகிறார்.
 
"காலத்தைப் பொருத்தவரை, இது ஒரே இரவில் நடக்காது. இது ஒரு செயல்முறையாக இருக்கும். அதற்கு சில காலம் ஆகும். யூகோஸ்லாவியா பிரிவதற்கு பத்து வருடங்கள் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்னும் அது இன்னும் முடிவடையவில்லை என்று சிலர் வாதிடுவார்கள். எனவே இது ஒரு நீண்ட செயல்முறை. ஒரு உருட்டல் செயல்முறை என்று நான் கூறுவேன். நாம் ஒரு பெரிய நாட்டைப் பற்றி பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்," என்கிறார் அவர்.
 
இரண்டாவதாக, ரஷ்யாவின் ஏழ்மையான பகுதிகள் மற்றும் ரஷ்யாவில் பொதுவாக பாகுபாடு காட்டப்படும் ரஷ்யர் அல்லாத மக்களிடம் இருந்து, ரஷ்ய உயிரிழப்புகள் அதிகரிக்கும்போது, யுக்ரேனில் நடக்கும் போர் நிச்சயமாக செயல்முறையை துரிதப்படுத்தும் என்று நான் கூறுவேன்.
 
பேராசிரியர் பட்நாயக்கின் பார்வையில், சிதறிக் கிடக்கும் நாடுகள் வேறுபட்ட சூழலைக் கொண்டுள்ளன. அவர் கூறுகிறார்.
 
"யூகோஸ்லாவியாவில் ஐரோப்பிய யூனியனுக்கும் நேட்டோவுக்கும் பெரிய பங்கு இருந்தது. உண்மையில் 1917-ல் ரஷ்யா மேற்கத்திய நாடுகளுடன் போரில் இருந்தது. அவர்களின் தோல்விக்குக் காரணம் பொருளாதாரம். வீரர்கள் அணிய காலணிகள் கூட இல்லை. சீருடைகள் இல்லை. மேலும் 1991 இல் உடைந்த சோவியத் யூனியன் எந்தப் போரினாலும் உடைக்கப்படவில்லை, அது ரஷ்யா, பெலாரூஸ், யுக்ரேன் ஆகியவற்றால் உடைக்கப்பட்டது. அவர்கள் சோவியத் யூனியனிலிருந்து ஒரே இரவில் தங்களைப் பிரித்துக் கொண்டனர்.
 
பிலிப் வாசிலெவ்ஸ்கி அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்துடன் தொடர்புடையவர். அவர் பல தசாப்தங்களாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏவுடன் பணியாற்றியுள்ளார்.
 
யுக்ரேனில் ரஷ்ய தோல்வியின் பின்விளைவுகளின் முன்னோக்கைப் பற்றிய அவரது கட்டுரை ஒன்றில் சில நிகழ்வுகளை விரிவாக எழுதியுள்ளார்.
 
"தோற்கடிக்கப்பட்ட ராணுவம் மற்றும் பலவீனமான பாதுகாப்பு சேவைகளுடன் ரஷ்யாவின் மத்திய அரசாங்கம் ஆயுதமேந்திய அதிகார போராட்டத்தில் சிக்கினால், இந்த நிலைமை ஆபத்தானது.
 
ரஷ்யாவுக்காக மற்றும் நாட்டிற்குள் உள்ள சில இன குடியரசுகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பிரிந்து செல்ல முயற்சிக்கலாம். இந்தச் சூழல் ரஷ்ய கூட்டமைப்பை இன்னும் பெரிய குழப்பத்தில் ஆழ்த்தும்," என்று அவர் கூறியுள்ளார்.
 
மூத்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஜோனாதன் பெர்ல்மனின் கூற்றுப்படி, ரஷ்யாவின் வீழ்ச்சியானது அதன் அணு ஆயுதக் கையிருப்புடன் மேற்கு மற்றும் உலகம் முழுவதும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும்.
 
"ரஷ்ய கூட்டமைப்பு சிதைந்தால், சோவியத் யூனியன் சரிந்தபோது இருந்ததை விட இந்த முறை ரஷ்யா குறைவாக ஒழுங்கமைக்கப்படும். ரஷ்யாவின் பரந்த அணு ஆயுதங்களை பாதுகாப்பது மிகவும் கடினமாக இருக்கும்," என்கிறார் அவர்.
 
 
ரஷ்ய கூட்டமைப்பின் சரிவு அல்லது அதன் பலவீனம் மத்திய ஆசியாவில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
மத்திய ஆசியாவில் ஏற்கனவே சீனாவின் செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறையில் பணியாற்றிய கத்தோலிக்க பல்கலைகழக பேராசிரியர் மைக்கேல் கிம்மேஜ் கூறுகிறார்.
 
அவரைப் பொறுத்தவரை, மத்திய ஆசிய நாடுகளுடன் சீனா பணியாற்றுவதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது.
 
"சீனாவின் அபிலாஷைகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவற்றுக்கான அதிக திறனை நீங்கள் காணலாம்."
 
பேராசிரியர் மைக்கேல் கிம்மேஜ், "ரஷ்யாவை சீனாவை அதிகம் சார்ந்திருக்கச் செய்ததால், இந்தப் போர் சீனாவுக்குப் பலனளித்தது என்று நான் நினைக்கிறேன். மறுபுறம் ஐரோப்பாவும் அமெரிக்காவும் உக்ரைன் போருக்குப் பல வளங்களைக் கொட்டி வருகின்றன. அதை அர்ப்பணித்திருக்கலாம். பிராந்தியத்தில் சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும்," என்று கூறினார்.
 
எழுத்தாளர் ஜானுஸ் புகாஜ்ஸ்கி, ரஷ்யாவின் பலவீனத்தில் சீனாவின் கண்கள் நிலைத்திருக்கும் என்று நம்புகிறார்.
 
"சீனாவின் கண்கள் மத்திய ஆசிய நாடுகளில் மட்டுமல்ல, ரஷ்யாவின் கிழக்கு பசிபிக் பகுதி, 19ஆம் நூற்றாண்டில் சீனாவின் ஒரு பகுதியாக இருந்த மற்றும் சீனா மிகவும் பலவீனமாக இருந்தபோது ஏகாதிபத்திய ரஷ்யாவின் கீழ் இருந்த எல்லைப் பகுதிகள் மீதும் இருக்கும்."
 
இது குறித்து பெய்ஜிங்கில் இன்னும் கடும் அதிருப்தி நிலவுகிறது. ரஷ்யா பலவீனமடையத் தொடங்கும் போது இது முன்னுக்கு வரும். சீனா கிழக்குப் பகுதிகளை மட்டுமின்றி, சைபீரியா மற்றும் தூர கிழக்கில் உள்ள வளங்கள் நிறைந்த பகுதிகளையும், வடக்கு கடல் வழியையும் நாடுகிறது."
 
"வன்முறை மற்றும் மோதலை நாடாமல் சீனாவின் அபிலாஷைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும், ஆனால் இப்பகுதியில் எங்களுக்கு பல நட்பு நாடுகள் உள்ளன" என்று ஜானுஸ் புகாஜ்ஸ்கி கூறுவது போல, மேற்கத்திய சக்திகளுக்கு சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியா தேவைப்படும். நாடுகள் உள்ளன.
 
மேலும் இந்தியாவையும் கூட்டாளியாக சேர்த்துக் கொள்வேன். ஏனெனில் இந்தியா மேற்கத்திய நாடுகளுக்கு பிராந்தியத்தை ஸ்திரப்படுத்த உதவும்.
 
மத்திய ஆசியாவின் ஐந்து நாடுகளிலும் கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் பங்கு அதிகரித்துள்ளதாக பேராசிரியர் அஜய் பட்நாயக் கூறுகிறார்.
 
"சீனாவின் பொருளாதார சக்தி அதிகரித்துள்ளது. சீனா இந்த நாடுகளில் உள்கட்டமைப்பில் நிறைய முதலீடு செய்துள்ளது. சீனா இந்த நாடுகளில் பொருளாதார ரீதியாக ஆழமாக ஊடுருவியுள்ளது. அதிபர் யெல்ட்சினின் கீழ் மத்திய ஆசியா ரஷ்யாவால் புறக்கணிக்கப்பட்டது.
 
ஆனால் புதினின் வருகைக்குப் பிறகு ரஷ்யா இந்த பிராந்தியத்தில் மீண்டும் கவனம் செலுத்துகிறது. ரஷ்யா இந்த பிராந்தியத்தில் நம்பகமான பங்காளி என்பதை நிரூபித்துள்ளது. 1991இல் சோவியத் யூனியன் உடைந்ததில் இருந்து, ரஷ்ய வீரர்கள் ஆப்கானிஸ்தான்-தாஜிக் எல்லையை பாதுகாத்து வருகின்றனர்.
 
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், தோற்கடிக்கப்பட்ட மற்றும் உடைந்த ரஷ்ய கூட்டமைப்பின் தாக்கம் என்னவாக இருக்கும்?
 
பிராந்தியத்தில் ஜனநாயகத்தை மேம்படுத்த இந்தியா உதவ வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
ஆனால் பேராசிரியர் பட்நாயக், "வெளியில் இருந்து திணிக்கப்படும் ஜனநாயகத்தின் முயற்சிகளை மத்திய ஆசியாவின் ஐந்து நாடுகள் விரும்புவதில்லை. அங்குள்ள மக்கள் வலிமையான தலைவர்களை விரும்புகிறார்கள். இந்தியா இந்த நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. அனைத்து மத்திய ஆசிய நாடுகளும் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக முக்கியமானவை.மத்திய ஆசியா மற்றும் யூரேசியாவை அணுகுவதற்கு இந்தியாவிற்கு போக்குவரத்து வழித்தடங்கள் இல்லை. ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பெலாரூஸ், ஆர்மேனியா ஆகியவை யூரேசியா யூனியன் எனப்படும் ஒரு குழுவை உருவாக்குகின்றன.
 
இந்த நாடுகளில் சரக்கு போக்குவரத்து இலவசம். இந்தியா அடைய விரும்புகிறது போக்குவரத்து தாழ்வாரம் வழியாக இந்த சந்தை. பேச்சு வார்த்தை நடந்து வருகிறது"
 
வாஷிங்டனின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியரான மைக்கேல் சி. கிம்மேஜின் கூற்றுப்படி, இந்தியா நடுநிலையாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
 
ஆனால் அவரைப் பொறுத்தவரையில் இந்தியாவும் மற்றவர்களும் யுக்ரேனை ஆதரிக்க அமெரிக்க நிர்வாகம் விரும்புகிறது.
 
"இது இந்தியாவின் தவறு என்று அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் ஏற்கெனவே பலமுறை வாதங்களைக் கேட்டிருக்கிறீர்கள். யுக்ரேனில் உள்ள மோதலில் மிக முக்கியமான ஒன்று உள்ளது. மேலும் இது பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்களுக்கு உலக அளவில் சர்வதேச ஒழுங்கை தீர்மானிக்கும்," என்கிறார் அவர்.
 
அதிபர் புதினை வரலாறு எப்படி நினைவில் வைத்திருக்கும்?
அமெரிக்க எழுத்தாளர் ஜானுஸ் புகாஜ்ஸ்கி, ரஷ்ய கூட்டமைப்பை உடைப்பவராக புடின் நினைவுகூரப்படுவார் என்று கூறுகிறார்.
 
“ரஷ்யாவின் துண்டாக்கப்பட்ட மற்றும் புதிதாக சுதந்திர நாடுகள் தோன்றிய அதிபராக அவர் அறியப்படுவார். யுக்ரேன் மற்றும் அண்டை நாடுகளில், அவர் ஒரு சர்வாதிகாரியாக நினைவுகூரப்படுவார்"
 
பேராசிரியர் மைக்கேல் சி. கிம்மேஜ்ஜின் கருத்துப்படி, நாட்டை ஒரு தலைமுறை பின்னுக்குத் தள்ளிய தலைவராக புதின் காணப்படுவார்.
 
"அரசியலமைப்பு வேலை செய்யாத சர்வாதிகாரத்தை நோக்கி புதின் ரஷ்யாவைத் தள்ளினார். அவருக்கு வாரிசு யார் என்று யாருக்கும் தெரியாது. எனது பார்வையில், புதின் ரஷ்யாவை ஒரு தலைமுறை பின்னுக்குத் தள்ளியுள்ளார்."
 
பேராசிரியர் பட்நாயக்கின் கூற்றுப்படி, புதினை வரலாறு எப்படி நினைவில் வைத்திருக்கும் என்பது யார் வரலாற்றை எழுதுகிறார் என்பதைப் பொறுத்தது.
 
"தற்போது மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு தகவல் யுத்தம் நடந்து வருகிறது. இரு தரப்பும் பரஸ்பரம் பரஸ்பர கதைகளை உருவாக்கி பிரசாரம் செய்கின்றன. ரஷ்ய ஊடகங்கள் ரஷ்யாவைப் பற்றிய நேர்மறையான படத்தை மட்டுமே காட்டுகின்றன. மேலும் மேற்கத்திய ஊடகங்களை நம்பினால், புதின் பலியாவார். சில கடுமையான நோய் மற்றும் ரஷ்யா சரிவின் விளிம்பில் உள்ளது.
 
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நூலக வளர்ச்சிப் பணிகள் கூட்டம்...புலவர்களுக்கு பாராட்டு