Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் 9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது

அமெரிக்காவில் 9 கொலைகளை செய்ய திட்டமிட்ட இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கைது
, சனி, 20 ஏப்ரல் 2019 (21:14 IST)
புளோரிடா மாநிலத்தில் 9 பேரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் இரண்டு பதின்ம வயது மாணவியர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவென் பார்க் நடுநிலைப்பள்ளியில் படிக்கும், 14 வயதான இரண்டு மாணவியரின் திட்டங்களை விவரிக்கின்ற கோப்பு ஒன்றை ஆசிரியர் கண்டுபிடித்த பின்னர், புதன்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
துப்பாக்கிகள் வாங்குதல், கொலை செய்தல் மற்றும் உடல்களை புதைத்தல் ஆகியவை பற்றி எட்டு தாள்களில் இரு மாணவியரும் விவரித்திருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
 
இந்த இரு மாணவியரும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் 9 கொலைகளையும், 3 கடத்தல்களையும் செய்ய இருந்ததாகவும் சந்தேகம் உள்ளது.
 
அவர்கள் எழுதி வைத்ததை தேடியபோது, அந்த மாணவர்கள் "மிகையுணர்ச்சிக் கோளாறால்" (ஹிஸ்டீரியா) பாதிக்கப்பட்டவர்களைபோல இருந்ததை பார்த்ததாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், "அவர்கள் என்னை அழைத்தால் அல்லது கண்டுபிடித்தால் இது ஏமாற்று வேலை என்று கூறிவிடுவேன்" என மாணவிகளில் ஒருவர் சொல்லியதை ஒட்டுக்கேட்டதாகவும் ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.
 
"தனிப்பட்ட தகவல்", "திறக்க கூடாது" மற்றும் பணித்திட்டம் 11/9" என்று பெயரிடப்பட்ட இந்த போல்டரை இந்த ஆசிரியர் பின்னர் கண்டுபிடித்தார்.
 
ஒன்பது ஆண்டுகள் சித்ரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள்
பெயர் பட்டியல் மற்றும் கொலைகளை செய்வது எப்படி? என விவரமான திட்டங்களை கொண்டிருந்த கையால் எழுதப்பட்ட திட்ட வரைவு உள்ளே இருந்தது.
 
துப்பாக்கிகளை வாங்குவது. சான்றுகளை எரித்து அழிப்பது, கொலை செய்யப்பட்டோரின் உடல்களை புதைப்பது போன்றவை பற்றி இந்த ஆவணங்கள் விவரிக்கின்றன.
 
இந்த நடவடிக்கையின்போது அணிகின்ற உடைகள் பற்றி இன்னொரு குறிப்பு தெரிவித்தது.
 
"நகங்கள் வேண்டாம். நமது ஆடைகளை அணிந்த தருணத்தில் இருந்து தலைமுடியை வெளிக்காட்ட வேண்டாம்" என்று அதில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 
"இதுவொரு நகைச்சுவை என்று அவர்கள் எண்ணியிருந்தால் பரவாயில்லை என்று ஹய்லாண்ட்ஸ் வட்டார ஷெரீப் அலுவலக செய்தி தொடர்பாளர் ஸ்காட் டிரசெல் கூறியதாக ஃபாக்ஸ்47 செய்தி தொலைக்காட்சி அவரது கூற்றை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.
 
"ஆனால், இதுபோன்றவற்றில் நகைச்சுவை ஏதுமில்லை. மக்களை கொலை செய்வது பற்றி நாம் நகைச்சுவை செய்வதில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவசர உதவிக்காக பெண்களுக்கு புதிய செயலி ; புதுஎண் - மத்திய அரசு அறிவிப்பு