Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவசர உதவிக்காக பெண்களுக்கு புதிய செயலி ; புதுஎண் - மத்திய அரசு அறிவிப்பு

அவசர உதவிக்காக பெண்களுக்கு புதிய செயலி ; புதுஎண்  - மத்திய அரசு அறிவிப்பு
, சனி, 20 ஏப்ரல் 2019 (21:04 IST)
நமது நாட்டில்  தீயணைப்பு, மருத்துவம் காவல்துறை போன்றவற்றின் அவசர உதவிகளுக்காக நாம் அழைக்கும் எண்கள் இனிமேல் ஒரே எண்ணாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாம் அவசர உதவிக்கு தீயணைப்புத்துறைக்கு 101, ஆம்புலன்ஸுக்கு 108, காவல்துறைக்கு 100, ஆகிய எண்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
 
இந்நிலையில் ஒவ்வொரு  துறைகளுக்கும் அவசர தேவைகளுக்காக  தனி எண்களுக்கு மக்கள் அழைப்பதற்குப் பதிலாக இனிமேல் 112 என்ற ஒரே எண்ணிற்கு அழைக்குமாறு  மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.
 
இந்த எண் ஏற்கனவே 20 மாநிலங்களில் அவசர எண்ணாக இருக்கிறது.
 
மேலும் நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்காக முதலில் செயல்படுத்திய 112 india என்ற செயலில் shout என்ற புதிதாகச் சேர்த்துள்ளனர்.
 
பெண்கள் ஆபத்தான் சூழலில் உள்ளதாகக் எண்ணினால் அவர்கள் இந்த shout என்ற பொத்தானை அழுத்தினால் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு அவர்கள் உள்ள லொக்கேசன் சென்று சேர்ந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களும் கூடிய விரைவில் முறையாக செயல்படுத்தப்படும் என்று பலரும் தெரிகிறது.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’வண்டி சீட்டில ’ தோச சுட்டா எப்படி இருக்கும் ? இதோ வைரல் வீடியோ