Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உசிலம்பட்டி சூப்பர் மார்க்கெட்டில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு திருட்டு

Advertiesment
உசிலம்பட்டி சூப்பர் மார்க்கெட்டில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு திருட்டு
, சனி, 10 அக்டோபர் 2020 (14:19 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சுமார் 65,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்ற நபர் ஒருவர் தான் திருடியதற்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றை அந்த கடையில் விட்டுச் சென்றுள்ளார்.
 
"என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பசிக்கிறது. உங்களுக்கு இது ஒருநாள் வருவாய்தான். ஆனால் என் குடும்பத்தின் மூன்று மாத வருவாய்க்கு இது சமம். மீண்டும் ஒரு முறை என்னை மன்னித்துவிடுங்கள்," என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
 
வியாழக்கிழமை காலை கடையின் உரிமையாளர் ராம்பிரகாஷ் கடையை திறக்க வந்தபோது கடைக்குள் இருந்த இரண்டு கணிப்பொறிகள், ஒரு தொலைகாட்சி மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை களவு போயிருந்தது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கடையில் பதிவாகியுள்ள கைரேகைகள் ஆகியவற்றை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழனிச்சாமியை முதல்வராக ஏற்பவர்களுக்கே கூட்டணியில் இடம்... கே.பி.முனுசாமி!!