மதுரையில் சத்துணவு பணியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் 988 சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முறையான முன்னேற்பாடுகளை செய்யாததால் மக்கள் வரிசையில் நிற்காமல், முக கவசம் அணியாமல் முண்டியடித்துக் கொண்டு விண்ணப்பங்களை வழங்கி உள்ளனர். கொரோனா காலத்தில் இதுபோன்று ஒரே இடத்தில் முன்னேற்பாடு இன்றி ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.