Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகா பள்ளியில் நடந்த நாடகத்தால் சிறைக்கு சென்ற தாய் - நடந்தது என்ன?

கர்நாடகா பள்ளியில் நடந்த நாடகத்தால் சிறைக்கு சென்ற தாய் - நடந்தது என்ன?
, புதன், 12 பிப்ரவரி 2020 (15:52 IST)
"எனக்கு இந்த நிலைமை ஏன் வந்தது என்று எனக்கு தெரியவில்லை," என்கிறார் நஸ்புனிசா.

இவர் வீட்டு வேலை செய்து தனியாக தன் குழந்தையை வளர்த்து வரும் 26 வயது தாய்.
இவரும் 52 வயதுள்ள ஃபரிதா பேகம் என்னும் ஆசிரியரும் கடந்த ஜனவரி மாதம் தேச துரோக வழக்கில் செய்து செய்யப்பட்டனர்.

ஃபரிதா பேகம் நஸ்புனிசா மகளின் ஆசிரியர். இவர்கள் இருவரும் முஸ்லிம்கள்.

அவர்கள் இருவரும், கர்நாடகாவில் உள்ள பிடார் மாவட்டத்தில் சிறை அதிகாரி அலுவலகத்தில் பிபிசியிடம் பேசினர்.

கண்ணீருடன் பேச தொடங்கிய அவர்கள், தாங்கள் திடமாக இருக்க முயல்வதாகவும் ஆனால் தங்களின் வாழ்க்கை திடீரென தலைகீழாய் மாறிவிட்டது என்றும் தெரிவித்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காரணம் ஒரு பள்ளி நாடகம்.

இவர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பிடார் மாவட்டத்தில் உள்ள ஷஹீன் பள்ளி சிஏஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து நாடகம் நடத்த ஏற்பாடு செய்தது. அதில் 9-12 வயதிலான குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இந்த நாடகத்தில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அந்த நாடகத்தை லைவ்வாக பதிவிட்டனர்.

அந்த நாடகத்தில் தனது குடியுரிமையை நிரூபிக்க எந்தவித ஆவணங்களையும் காட்டப்போவதில்லை என்றும், `மோதியை செருப்பால் நடிக்கப்போவதாகவும்` வயதான பெண்மணி ஒருவர் தெரிவிப்பார்.

இதுதான் தனது புகாருக்கு காரணம் என புகார் கொடுத்த நீலேஷ் ரக்ஷல் தெரிவிக்கிறார். இவர் தன்னை சமூக ஆர்வலர் என்கிறார்.
webdunia

"மோதியை தவறாக பேசுவதற்கும், வெறுப்பை பரப்புவதற்கும் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக" இவர் புகார் தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாகத்தின் மீதும் அந்த நாடகத்தை லைவ்வில் பதிவிட்ட பெற்றோர்கள் மீதும் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது.

"அவர்கள் சிஏஏ மற்றும் என்ஆர்சி குறித்த தவறான தகவல்களை பரப்ப முயன்றனர், முஸ்லிம் சமூகத்திற்கு இடையே அச்ச உணர்வை தூண்டினர், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பிரதமரை செருப்பால் அடிக்கப்போவதாக கூற வைத்தனர்" என காவல்துறை கைது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பெண்கள் ஏன் கைது செய்யப்பட்டனர்?

ஜனவரி 21ஆம் தேதி ஷஹீன் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த நாள் முழுவதுமே கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடாரில் உள்ள அந்த பள்ளியில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஷஹீன் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி தெளசீஸ் மடிகெரி, "ஷஹீன் பள்ளி சிறுபான்மை சமூகத்தினர் பயிலும் ஒரு பள்ளியாகும், இந்த பள்ளிக்கு 9 மாநிலங்களில் 43 கிளைகள் உள்ளன. பிடாரில் உள்ள பள்ளியில் 50% முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பயில்கின்றனர்" என தெரிவித்தார்.

அவர் நடந்தவற்றை நம்மிடம் கூறுகிறார். லைவ்வில் பதியப்பட்ட அந்த நாடகத்தின் மூன்றரை நிமிட வீடியோ புகார் தெரிவிக்கும்போது ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
தற்போது அந்த வீடியோ அழிக்கப்பட்டுவிட்டது.

அந்த வீடியோ முகமது யூசஃப் ரஹீம் என்பவரது பெயருள்ள சமூக ஊடக கணக்கிலிருந்து பதியப்பட்டுள்ளது. அவர்தான் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3ஆவது நபர். அவரை தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்தோம்.

ஜனவரி 25ஆம் தேதியன்று, நீலெஷ் ரக்ஷல் என்பவர் சமூக ஊடகத்தில் இந்த வீடியோ வலம் வருவதை கண்டுள்ளார். அதன்பின் ஜனவரி 25ஆம் தேதி தனது நண்பர்கள் இருவர் மற்றும் ஒரு வழக்கறிஞருடன் காவல் நிலையத்திற்கு சென்று பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக புகார் தெரிவித்ததாக கூறுகிறார் ரக்ஷல்.

அந்த புகாரில் ஷஹீன் பள்ளியில் நடத்தப்பட்ட நாடகம் ஒன்றில் பிரதமர் குறித்து அவதூறாக பேசப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
webdunia

அதேபோல் அங்கு தேச துரோக குற்றம் நடப்பதாகவும், போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஜனவரி 26ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அதில் அந்த பள்ளியில் தலைவர் முதல் குற்றவாளி என்றும், பள்ளி நிர்வாகம் 2ஆம் குற்றவாளி என்றும், முகமது யூசஃப் ரஹீம் மூன்றாம் குற்றவாளில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூண்டிவிடும்விதமாக வேண்டுமென்ற அவதூறாக பேசுதல், தேசத் துரோகம், மதத்தை அடிப்படையாக கொண்டு எதிரித்தன்மையை தூண்டுதல், பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தல் போன்ற பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஜனவரி 27ஆம் தேதியன்று போலீஸார் அந்த பள்ளிக்கு சென்று சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்தனர்.

மீண்டு ஜனவரி 8ஆம் தேதி குழந்தைகளிடம் விசாரணை மேற்கொள்ள போலீஸார் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் எந்த வழிமுறையையும் பின்பற்றாமல் ஆயுதங்களை வைத்து கொண்டு குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டதாக பள்ளி தலைமை நிர்வாகி தெளசீஃப் தெரிவிக்கிறார்.

ஆனால் காவல்துறை கண்காணிப்பாளர் நாகேஷ்.டி.எல் இதனை மறுக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்களை டிஸ்மிஸ் செய்தாலும் கவலை இல்லை; கெத்து காட்டும் நாராயணசாமி