Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன நிறுவனத்திற்கு 498 கோடி செலுத்தி 'விஷ உரம்' சர்ச்சையை முடித்துக் கொண்ட இலங்கை

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (00:01 IST)
இலங்கையில் உள்ள அரச வங்கியொன்று, சீன நிறுவனத்துடன் நீடித்து வந்த சர்ச்சையைத் தீர்ப்பதற்காக வெள்ளிக்கிழமை 498 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தியுள்ளது.
 
சீன நிறுவனமான குவிங்டாவோ சிவின் பயோடெக் நிறுவனம், இலங்கைக்கு கரிம உரத்தை அனுப்பியிருந்தது, ஆனால், அதில் குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
 
செய்தி நிறுவனமான பிடிஐ தகவலின்படி, கொழும்பின் வர்த்தக உயர் நீதிமன்றம் குவிங்டாவோ சிவின் பயோடெக் நிறுவனம் பணம் செலுத்துவதற்கான தடையை நீக்கியதை அடுத்து இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
 
இந்த விவகாரத்தில் சீன நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.
 
முன்னதாக, இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான சிலோன் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் இந்த கொடுப்பனவை நிறுத்துவதற்கு உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தது. இந்த உத்தரவின் காரணமாக, சீன நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட கடன் கடிதத்தின் கீழ் பணம் செலுத்த முடியாது என இலங்கை மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
 
சீனாவின் கடும் அழுத்தத்திற்குப் பிறகு இலங்கை அரசாங்கம் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் நச்சு உரம் ஏற்றுமதியை ஏற்க மறுத்துள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஆண்டு நவம்பரில், பணம் செலுத்தாததால், சீன தூதரகத்தால், இலங்கை மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments