Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுக்ரேனில் ரஷ்ய ராணுவ ஜெனரல் கொல்லப்பட்டார் - யுக்ரேன் ராணுவம்

Advertiesment
ரஷ்ய ராணுவ மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி கால்ஸ்னிகோஃப்Russian army general killed
, சனி, 12 மார்ச் 2022 (00:18 IST)
ரஷ்ய ராணுவ மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி கால்ஸ்னிகோஃப் கொல்லப்பட்டதாக யுக்ரேன் கூறுகிறது. 
 
ராணுவ தாக்குதலில் ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
 
யுக்ரேனின் உள்துறை அமைச்சக ஆலோசகர், ரஷ்ய ராணுவ மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி கால்ஸ்னிகோஃப் ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்டத்தின் 29வது படைப்பிரிவு தளபதியாக இருந்ததாக கூறுகிறார்.
 
இதை மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். ஆனால், அந்த ஜெனரலின் பெயரை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
 
இந்த விவகாரம் குறித்து ரஷ்யா தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
 
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் பணியாற்றிய குறைந்தது இரண்டு ராணுவ அதிகாரிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலூன் வியாபாரி பெண்..... மாடலிங்கில் நுழைந்து அசத்தல்....