Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'யுக்ரேனில் சண்டையிட சீனாவிடம் ஆயுதங்களைக் கோரும் ரஷ்யா'!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (10:26 IST)
யுக்ரேனில் போரை நடத்துவதற்காக சீனாவிடம் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை ரஷ்யா கோரி வருவதாக ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
 
யுக்ரேன் போரில் பயன்படுத்தும் வகையில் ராணுவத் தளவாடங்களை சீனா வவங்க வேண்டும் என ரஷ்யா விரும்புவதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
 
பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா சீன உபகரணங்களை கோரி வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஷ்யா எந்த வகையான ராணுவத் தளவாடங்களை சீனாவிடம் கோருகிறது என்பதைக் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
 
ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று, அந்த நாட்டுக்கு உதவி செய்வதற்கு சீனா தயாராகி வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அந்தச் செய்தி மேலும் கூறியுள்ளது.
இதேபோல நியூயார்க் டைம்ஸிலும் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதிலும் அமெரிக்க அதிகாரிகள் மேற்கோள்காட்டப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத் தடைகளின் தீவிரத்தைத் தணிக்கும் வகையில் பொருளாதார ரீதியிலான உதவிகளை சீனாவிடம் ரஷ்யா கோரியிருப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது.
 
ரஷ்யா - யுக்ரேன் மோதலில் சீனா இதுவரை தன்னை நடுநிலை வகிப்பதாக காட்டுவதற்கே முற்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை மற்றும் பொது அவையில் நடுநிலை வகித்தது. ரஷ்யாவின் படையெடுப்பை இதுவரை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.
 
இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் ரோமில் சீன வெளியுறவுக் கொள்கை அதிகாரி யாங் ஜீச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஞாயிற்றுக்கிழமை என்பிசி தொலைக்காட்சியில் பேசிய சல்லிவன், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் சிக்கல்களை "சீனா அல்லது வேறு யாரும் ஈடுசெய்ய முடியாது என்பதை அமெரிக்கா உறுதி செய்யும்" என்று கூறினார்.
 
போர் கட்டுப்பாடு இல்லாம் செல்வதை தடுக்க வேண்டும் - சீனா
 
இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்திடம் கேட்டபோது, யுக்ரேனில் நடைபெறும் போர் கட்டுப்பாடு இல்லாமல் போவதைத் தடுப்பதே சீனாவின் நோக்கம் என்று தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
 
"யுக்ரேனின் நிலைமை உண்மையில் அதிருப்தி அளிக்கிறது" என்று தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
"இப்போது பதற்றமான சூழ்நிலையை அதிகரிப்பதையோ அல்லது கட்டுப்பாட்டை மீறுவதையோ தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறோம்" என்று அவர் கூறினார்.
 
சீனாவிடம் ரஷ்யா உதவி கேட்பதாக வந்த செய்திகள் பற்றி கேட்டபோது "அதைப் பற்றி கேள்விப்படவே இல்லை" என்று கூறினார்.
 
இதனிடையே ரஷ்யாவின் பொருளாதாரத் தடைகளை மீற சீனா நடவடிக்கை எடுத்தால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 
சீனாவிடம் ரஷ்யா ராணுவ உதவி கேட்பதாக வெளியாகியிருக்கும் தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாக இது கவனிக்கப்படுகிறது.
 
யுக்ரேனுக்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் வழங்குவதை சீனா கண்டித்திருக்கிறது. இந்த நேரத்தில் ரஷ்யாவுக்கு சீனா ஆயுதம் வழங்க முன்வந்தால் அது நிலைமையை மோசமாக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள்.
 
போலந்தின் எல்லையை ஒட்டிய நகரில் ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பதால் நேட்டோ நாடுகள் கவலையடைந்திருக்கின்றன. யுக்ரேனைத் தாண்டி போர் நடப்பதற்கோ, நேட்டோ நாடுகளுடன் ரஷ்யா நேரடியாக மோதுவதற்கு இது காரணமாக அமைந்துவிடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments