வட கொரியா எந்த நேரத்திலும் தமது ஏழாவது அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. இந்நிலையில், வட கொரியாவுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி சுங் கிம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்தகைய அணு ஆயுத சோதனைக்கு விரைவாகவும், வலுவாகவும் பதிலளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை.
இந்நிலையில், ப்ளூம்பெர்க் என்ற செய்தி ஊடகத்தின் தகவல்படி, அடுத்த கட்ட ஏவுகணை சோதனை எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங், எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.