மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாத நிலையிலும் கூட, ஹெச்ஐவி வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10 சதவீத குழந்தைகளுக்கு எய்ட்ஸ் உருவாகவில்லை என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
ஹெச்ஐவி வைரஸ் மாதிரிகள் (கோப்புப் படம்)
ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 175 தென் ஆப்ரிக்க நாட்டு குழந்தைகளிடம் மருத்துவ சோதனை செய்ததில், அக்குழந்தைகளின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, ஹெச்.ஐ.வி. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட குரங்கினங்களில் உள்ளதை போலவே நடந்து கொள்வதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருக்கும் நிலையிலும் வாழ முடியும் என்பதற்கான முதல் அறிகுறிகளாக இந்த கண்டுபிடிப்புகள் இருக்கக்கூடும் என்றும் இது இந்த வைரஸால் தொற்றப்பட்டவர்களுக்கு புதிய சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.