Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்பு துண்டிக்கப்பட்ட வாயேஜர் 2 விண்கலத்தின் ‘இதயத் துடிப்பை’ கண்டறிந்த நாசா

VOYAGER 2
, வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (21:07 IST)
வானத்தை வழக்கம்போல ஸ்கேன் செய்தபோது வாயேஜர் 2-லிருந்து ஒரு சமிக்ஞை பெறப்பட்டதாக நாசா கூறியது.
 
தனது வாயேஜர் 2 விண்கலத்துடனான தொடர்பை பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் இழந்த பின்னர், இப்போது அதனிடமிருந்து ஒரு ‘இதயத்துடிப்பு’ சமிக்ஞையைப் பெற்றுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
 
1977-ம் ஆண்டு முதல் முதல் பிரபஞ்சத்தை ஆராய்ந்து வந்த இந்த விண்கலம், கடந்த மாதம் அனுப்பப்பட்ட தவறான ஒரு கட்டளை அனுப்பப்பட்ட பின்னர் தனது ஆண்டனாவை பூமியிலிருந்து இரண்டு டிகிரி விலக்கிச் சாய்த்தது.
 
இதன் விளைவாக, இந்த விண்கலம் கட்டளைகள் பெறுவதும், தரவுகள் அனுப்புவதும் நின்றுபோனது.
 
ஆனால் செவ்வாயன்று, வானத்தை வழக்கம்போல ஸ்கேன் செய்தபோது வாயேஜர் 2-லிருந்து ஒரு சமிக்ஞை பெறப்பட்டதாக நாசா கூறியது.
 
 
வாயேஜர் 2 இப்போது பூமியில் இருந்து 1,990 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது, அங்கு அது நட்சத்திரங்களுக்கு இடையேயான வெளியில் ஒரு மணிக்கு 55,346 கி.மீ. வேகத்தில் பயணம் செய்துகொண்டிருக்கிறது.
 
கடந்த ஜூலை 21 முதல், இந்த விண்கலம் கட்டளைகளைப் பெறவோ, அல்லது ‘Deep Space Network’ எனப்படும் உலகம் முழுவதும் உள்ள மாபெரும் ரேடியோ ஆண்டெனாக்களின் இணைப்புக்குத் தரவுகள் அனுப்பவோ இல்லை.
 
இருப்பினும், விண்கலத்துடனான தொடர்பு இப்போது மீண்டும் நிறுவப்பட்டுள்ளதால் – அது குறைந்த அளவிலான தொடர்பாகவே இருந்தாலும் -- புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
 
விண்கலம் கிட்டத்தட்ட 2,000 கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் இருப்பதால், அதன் சமிக்ஞை பூமியை வந்தடைய, சுமார் 18 மணிநேரம் ஆகும்.
 
இச்செய்தி, வாயேஜர் 2 இன்னும் ஆரோக்கியமாக இருப்பதையும், இன்னும் தரவுகளை அனுப்பிக்கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்துவதாக நாசா தெரிவித்துள்ளது.
 
ஃபகத் ஃபாசில்: சாதிய வன்மம் நிறைந்த கதாபாத்திரத்தை கொண்டாடும் நெட்டிசன்கள்
 
1977-ம் ஆண்டு சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருப்பவற்றை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டதிலிருந்து வாயேஜர் விண்கலம் விண்வெளியில் மிதந்து வருகிறது
 
கடந்த திங்களன்று, ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் உள்ள தனது பெரிய ஆன்டெனா, வாயேஜர் 2-லிருந்து ஏதேனும் சமிக்ஞைகள் கிடைக்கிறதா எனக் கண்டறிய முயற்சிப்பதாக நாசா கூறியிருந்தது. இந்த ஆன்டெனா, வாயேஜர் 2 விண்கலத்துக்குச் சரியான தகவல்களை அனுப்பி, அதனுடனான தொடர்பை நிறுவ முயற்சிப்பதாகவும் நாசா கூறியிருக்கிறது.
 
இப்போதைக்கு முழுமையான தகவல்தொடர்பு இன்னும் நிறுவப்படவில்லை என்றாலும், வாயேஜர் 2 ஒவ்வொரு ஆண்டும் பல முறை தன் அதன் ஆன்டெனாவை மீண்டும் பூமியை நோக்கித் திருப்பும் வகையில், ‘ரீசெட்’ செய்யக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்த ‘ரீசெட்’ அக்டோபர் 15 அன்று நடைபெற உள்ளது. இது விண்கலத்துடனான தொடர்புகளை மீண்டும் நிறுவும்,’ என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
இதற்கிடையில், ஆய்வுக் கருவிகள் நிறைந்த இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் அதன் திட்டமிட்ட பாதையில் செல்லும் என்று நாசா எதிர்பார்க்கிறது.
 
தொடர்பு துண்டிக்கப்பட்ட வாயேஜர் 2 விண்கலத்தின் ‘இதயத் துடிப்பை’ கண்டறிந்த நாசா
 
176 வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்புறக் கோள்களான வியாழன் மற்றும் சனியை ஒரே நேர்க்கோட்டில் வரும். அந்த அரிய நிகழ்வைப் பயன்படுத்தி அக்கோள்களை ஆய்வு செய்யும் வகையில் வாயேஜர் விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
 
1977-ம் ஆண்டு சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருப்பவற்றை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டதிலிருந்து இந்த விண்கலம் விண்வெளியில் மிதந்து வருகிறது.
 
வாயேஜர் 2 மற்றும் அதன் இரட்டையான வாயேஜர் 1 ஆகியவை சூரியனால் உருவாக்கப்பட்ட துகள்கள் மற்றும் காந்தப்புலங்களின் பாதுகாப்பு குமிழியான ஹீலியோஸ்பியருக்கு வெளியே இயங்கும் இரண்டே விண்கலங்கள் ஆகும். அவை முறையே 2018 மற்றும் 2012-ல் விண்மீன்களுக்கு இடையே உள்ள வெளியை அடைந்தன.
 
176 வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்புறக் கோள்களான வியாழன் மற்றும் சனியை ஒரே நேர்க்கோட்டில் வரும். அந்த அரிய நிகழ்வைப் பயன்படுத்தி அக்கோள்களை ஆய்வு செய்யும் வகையில் இந்த விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
இதுவரை நெப்டியூன் மற்றும் யுரேனஸை அடைய ஏவப்பட்ட ஒரே விண்கலம் வாயேஜர் 2 தான். வாயேஜர் 1 இப்போது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 2,400 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவே பூமியிலிருந்து மிகத் தொலைதூரத்திலிருக்கும் விண்கலமாகும்.
 
 
இந்தியாவின் பல இசை வடிவங்களுக்கு ஆதி தமிழிசையே ஆதாரம் என நிரூபித்த ஆபிரகாம் பண்டிதர்
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
கடந்த வாரம், நாசா வாயேஜரின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது. அதில், "நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்... வாயேஜர் 2 அக்டோபர் வரை தரவுகளை அனுப்புவதில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறது. இதற்கிடையில், நான் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 15 பில்லியன் மைல்கள் (24 பில்லியன் கிமீ) தொலைவில் இருக்கிறேன், நன்றாகச் செயல்படுகிறேன்! - V1", என்று கூறப்பட்டிருந்தது.
 
ஒவ்வொரு விண்கலமும் பூமியின் ஒலிகள், படங்கள் மற்றும் செய்திகளுடன் கூடிய ஒரு ‘தங்கப் பெட்டகத்தை’ உடன் எடுத்துச் செல்கிறது. இது பூமியின் கதையை வேற்றுக்கிரக வாசிகளுக்குச் சொல்வதற்காகக் கொண்டு செல்லப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸ் ஸ்டேசனுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!வைரல் வீடியோ