Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நரேந்திர மோதி பிறந்தநாள் விழா பேச்சு - ''இயற்கை நமக்கு மிகவும் நெருக்கமானது''

Advertiesment
Narendra Modi
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (18:37 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில் தனது பிறந்தநாளை விழாவில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி காஷ்மீர் பிரச்சனை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து பேசியுள்ளார்.


 
இன்று (செவ்வாய்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோதி, கெவாடியாவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் ஒரு பையில் இருந்த பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
 
இந்த விழாவில் பேசிய நரேந்திர மோதி காஷ்மீர் பிரச்சனை குறித்தும் பேசினார்.
 
''கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு -காஷ்மீர், லடாக் பகுதி மக்கள் பாடுபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். அது பிரிவினைவாதம் மற்றும் வன்முறை என வடிவமெடுத்து நாடே அந்த பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது'' என்று பிரதமர் மோதி கூறினார்.
 
மேலும் அவர் பேசுகையில், ''சுற்றுசூழல் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யாமலே வளர்ச்சி பணிகளை செய்ய முடியும் என்று நமது கலாச்சாரம் நம்புகிறது. இது தற்போது மீண்டும் உறுதியாகியுள்ளது. இயற்கை நமக்கு மிகவும் நெருக்கமானது. அது நமக்கு ஆபரணம் போல'' என்று நரேந்திர மோதி பேசினார்.
 
முன்னதாக இன்று காலையில் , நர்மதா மாவட்டத்தில் உள்ள கருடேஸ்வர் தத் கோயியில் பிரதமர் நரேந்திர மோதி வழிபாடு செய்தார். 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானில் சடலமாக மீட்கப்பட்ட இந்து மாணவி: கொலையா? தற்கொலையா??