Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டைனோசர்கள் குறித்த கட்டுக்கதைகளும் அதன் உண்மைகளும்!

Advertiesment
டைனோசர்கள் குறித்த கட்டுக்கதைகளும் அதன் உண்மைகளும்!
, சனி, 27 நவம்பர் 2021 (09:54 IST)
டைனோசர்கள் குறித்து நம்மில் பலருக்கு பல்வேறு கற்பனைகள் இருக்கலாம்.
 
ஆனால் நமது ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆதி உயிரினம் குறித்த கட்டுக்கதைகளை உடைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
 
இதோ அதில் சில.
 
அனைத்து டைனோசர்களும் விண்கல் விபத்தில் அழிந்துவிட்டன?
webdunia
சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுக்கு ஒரு மோசமான நாளாக அமைந்தது. சுமார் 10 கிலோமீட்டர் விட்டமுடைய ஒரு பெரிய விண்கல் பூமியை நேரடியாக தாக்கியது.
 
மெக்சிகோவின் யூகாடான் தீபகற்பத்தின் கீழே ஒரு மிகப்பெரிய எரிமலை வாய் முகப்பு புதைந்து போனது. அப்போது மிக அதிகளவிலான விலங்குகள் அழிந்தன. ஆனாலும் அதில் சில டைனோசர்கள் தப்பின என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
 
"அந்த விண்கல் மோதியபோது பல டைனோசர்கள் அழிந்தாலும், மிகச்சிறிய சிறகு கொண்ட டைனோசர்கள் இன்றளவும் உள்ளன." என்கிறார் லண்டனின் நேச்சரல் வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பால் பாரெட்.
"அவைதான் வாழும் டைனோசர்கள். எனவே பறவை இனங்களை நாம் கணக்கிட்டால், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டைனோசர் இனத்தைவிட தற்போது அதிகமாகவுள்ளது,"
webdunia
டிரானோசரஸ் ரெக்ஸ் வகை டைனோசர்களிடமிருந்து நீங்கள் தப்ப அசையாமல் நின்றால் போதுமா?
டிரானோசரஸ் ரெக்ஸ் டைனோசர்கள்தான் ஜூராஸிக் பட தொடரின் முதல் படத்தின் நாயகன். அந்த படத்தில் மனிதர்கள் நகரவில்லை என்றால் டைனோசர்களால் கண்டறிய முடியாது.
 
உண்மையில் நீர் மற்றும் நிலத்தில் என இரண்டிலும் வாழும் சில உயிரினங்கள் அம்மாதிரியான திறனை பெற்றுள்ளது. ஆனால் இந்த டைனோசர்கள் அந்த திறன் பெற்றவை அல்ல என பேராசிரியர் பாரெட் தெரிவிக்கிறார்.
 
"15 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று அந்த விலங்கிற்கு நல்ல பார்வை திறன் இருந்ததாக கூறுகிறது," என்கிறார் பேராசிரியர் பேரட்.
 
டிரானோசரஸ் ரெக்ஸ் டைனோசர்கள் வாகனத்தை மிஞ்ச முடியுமா?
webdunia
அதே படத்தில் அந்த வகை டைனோசர்கள் ஒரு வாகனத்தை ஓட்டத்தில் மிஞ்சுவதாக காட்டப்பட்டிருக்கும்.
 
ஆய்வு ஒன்று அந்த டைனோசர்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. அதேபோன்று எந்த வித சிரமும் இல்லாமல் மணிக்கு 20 - 29 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.
 
"நாம் எவ்வளவு தூரம் வேகமாக ஓட முடியும் என்பதை காட்டிலும் எவ்வளவு தூரத்திற்கு நமது உடல் சிரமம் இல்லாமல் ஓட முடியும் என்பது முக்கியம்," என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தின் தேசிய வரலாற்று அருங்காட்சியத்தின் கண்காணிப்பாளர் மரியானா டி கியாகோமா.
 
எனவே டி ரெக்ஸ் டைனோசர்கள் வேகமாக ஓடலாம் ஆனால் காரை மிஞ்சும் அளவுக்கு இல்லை.
 
நாம் டைனோசர்களை க்ளோன் செய்ய முடியுமா?
டி ரெக்ஸ் மனிதர்கள் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்னரே இந்த இன டைனோசர்கள் அழிந்துவிட்டன. ஜூராசிக் பார்க் திரைப்படத்தில் சொல்லப்பட்டது போல அது மீண்டும் இந்த உலகத்தில் தோன்றாது.
 
"நம்மிடம் உள்ள தகவலின்படி டைனோசர்களின் டிஎன்வி-ன் இருப்பு நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. எனவே அதை க்ளோன் செய்வது இயலாது," என்கிறார் பேராசிரியர் பேரட்.
 
புத்தியில்லாத உயிரினங்களா டைனோசர்கள்?
webdunia
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள், டைனோசர்கள் எவ்வாறு வாழ்ந்தன மற்றும் நடந்துகொண்டன என்பதை அறிய உதவியதாக டாக்டர் டி கியாகோமோ விளக்கியுள்ளார்.
 
''அனைத்து டைனோசர்களும் புத்திசாலிகள் இல்லை, அதேபோல் அனைத்து டைனோசர்களும் அறிவற்று இருந்ததில்லை''
 
''தாங்கள் வாழ்ந்த உலகில் நீடிக்க தேவையான புத்திக்கூர்மையுடன் அவை வாழ்ந்தன''
 
சில சிறிய மாமிசம் உண்ணும் வகை டைனோசர்கள் சிறந்த புத்திக்கூர்மையுடன் இருந்ததாக பேராசிரியர் பேரட் கூறினார்.
 
''இரவு நேரத்தில் பெரும் விலங்குகளுடன் மோதலை தவிர்க்க தேவையான சூழலை உருவாக்க சில டைனோசர்கள் முயற்சித்திருக்கும். அப்படியானால், அந்த சூழலை சமாளிக்க அவற்றுக்கு செவித்திறன், பார்வைத்திறன், நுகரும் திறன் சிறப்பாக இருக்கவேண்டும்''
 
அதேவேளையில், டைனோசர்கள் மோசமான பெற்றோர்களாக வாழ்ந்தனவா?
 
குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தாத, தனிமையான மற்றும் மிருகத்தனமான குணம் கொண்ட உயிரினமாகவே டைனோசர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கருதப்பட்டன. பின்னர் 1970 மற்றும் 1980களில், அவற்றின் சமூக செயல்பாடு மற்றும் வாழ்க்கை தொடர்பாக சில சிக்கலான தகவல்கள் வெளிவந்தன.
 
மைசௌரா என்றழைக்கப்படும் தாவரங்களை உண்டு வாழும் டைனோசர் 77 மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
 
கடந்த அக்டோபரில் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் ஜர்னல் இதழில் வெளிவந்த பதிப்பில், இந்த டைனோசர்கள், 193 மில்லியன் ஆண்டுகள் வாழந்ததாகவும், மந்தைகளாக தங்கள் குஞ்சுகளை பராமரித்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
''டைனோசர்கள் குறித்த தகவல்களில் தற்போது புரிதல் உள்ளது. நல்ல பெற்றோர்களாக சில டைனோசர்களாவது இருந்துள்ளன என்பதும் தெரியவருகிறது'' என்று பேராசிரியர் பேரட் தெரிவித்தார். சில டைனோசர்கள் அவ்வாறு இல்லை''
 
தங்களை தாங்களே சில டைனோசர்கள் பாதுகாத்து கொண்டதாக டி கியாகோமோ குறிப்பிட்டுள்ளார்.
 
''அலோசாரஸ் போன்ற வேட்டையினங்கள் உட்பட சில டைனோசர்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தின'' என்று அவர் தெரிவித்தார்.
 
''சிட்டிபட்டி ஓஸ்மொல்ஸ்கே என்கிற டைனோசர் பிக் மாமா என்றழைக்கப்பட்டதற்கு காரணம், அது தனது முட்டை மீது அடைகாக்கும் நிலையில் காணப்பட்டது தான்''

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

HBD உதயநிதி ஸ்டாலின் - சினிமாவும் அரசியலும்!!