திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தாளை கொண்டாடுகிறார்.
நடிகரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடடுகிறார். ஆனால், தனது பிறந்தநாளை கழகத்தினர் கொண்டாட வேண்டாம் என தெரிவித்தார். இதற்கு மாறாக என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் இருக்க வேண்டும்m என கேட்டுக்கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
விஜய், திரிஷா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா.
திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் முதல் படம் ஒரு கண் ஒரு கண்ணாடி. இதன் பின்னர் பல படடிங்களில் நடித்து வந்த அவர் 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.
2019 ஜூலை 7 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியலில் ஈடுபட்டாலும் படங்களில் நடிப்பதையும் படங்களை தயாரிப்பதியும் இவர் கைவிடவில்லை.
உதயநிதி ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!