நேபாளத்தில் காணாமல் போன விமானம் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு

Webdunia
திங்கள், 30 மே 2022 (11:01 IST)
நேபாளத்தில் நேற்று காணாமல் போன தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரட்டை எஞ்சின் விமானம் சிதைந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்த விமானத்தில் மொத்தம் 22 பேர் பயணித்தனர். இதுவரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தேவ் சந்திர லால் கர்ணா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.


நேபாளத்தில் உள்ள மஸ்டாங் மாவட்டத்தில் சுமார் 14500 அடி உயர இமயமலைப் பகுதியில் இந்த விமானம் நேற்று விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு மீட்பு ஹெலிகாப்டர்கள் சென்று அடைந்துள்ளதாகவும் அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகைக்கு பிறகு எங்களை பார்த்து ஒட்டுமொத்த நாடே வியக்கும்: செங்கோட்டையன்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற முடியலையே.. மன வருத்தத்தில் மதுரை இளைஞர் தற்கொலை..!

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர்.. கருணைக்கொலை செய்ய அனுமதியா? இன்று தீர்ப்பு..!

அதிமுகவை அப்செட் ஆக்கிய விஜய் பேச்சு!.. எடப்பாடி பழனிச்சாமி மூவ் என்ன?....

2,081 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments