Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க. ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்வு; துணை பொதுச் செயலாளராகிறார் கனிமொழி

மு.க. ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்வு; துணை பொதுச் செயலாளராகிறார் கனிமொழி
, ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (14:52 IST)
திமுக தலைவராக மு.. ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் ஐந்து துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மு. கருணாநிதி மறைந்த பிறகு, தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவர் கட்சியின் செயல் தலைவராகவும் பதவி வகித்தார்.

திமுகவின் மற்ற நிர்வாகிகள்

தற்போது சென்னையில் நடந்துவரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் மற்ற நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

க.பொன்முடி, ஆ. ராசா, ஐ. பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் துணை பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கே.என். நேரு திமுகவின் முதன்மைச் செயலாளராக மீண்டும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுகவின் 15வது உள்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு, ஏற்கனவே அப்பதவிகளில் இருந்த மு.க. ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதனால் இவர்கள் மூவருமே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டி.ஆர். பாலு திமுகவின் நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் உள்ளார்.

துணை பொதுச் செயலாளரான கனிமொழி

திமுகவின் ஐந்து துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் சமீபத்தில் அப்பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகினார்.
webdunia

துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த ஒரே பெண்ணான சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகிய நிலையில், அப்பதவிக்கு கனிமொழி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது இப்போது உறுதியாகியுள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி சமீபத்தில்தான் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

முன்னதாக ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக அவர் ஓராண்டு காலம் இருந்தார். கனிமொழி திமுகவின் மகளிரணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

Updated By: Prasanth.K

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் வரலாறு காணாத மழை: சாலையில் வெள்ளநீரால் பொதுமக்கள் அவதி!