Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு மணி நேர மழைக்கே சென்னை நிலைகுலைகிறது – கமல்ஹாசன்

Advertiesment
Dravida Model
, சனி, 8 அக்டோபர் 2022 (17:42 IST)
ஒருமணி நேரம் மழைக்கே சென்னை நிலைகுலைந்துபோவதாக  நடிகர் கமல்ஹசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள்  நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:

ஒரு மணி நேர மழைக்கே  சென்னை நிலைகுலைந்துபோகிறது.  பல மணி நேரம்  நகரில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குடியிருப்புகளிலும்  கழிவு நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஸ்மார்ட்சிட்டிக்கு பல கோடி ரூபாய்களை அரசு செலவழித்தும் இதைத் தடுக்க முடியவில்லை.  சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர்வடிகால்கள்  சேதமடைந்துள்ளன. இதைச் சீரமைக்கும் நடவடிகைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைக்கில் சென்ற நபரை மிரட்டிய காவலர் மீது வழக்குப் பதிவு