பிரான்ஸில் அதிர்ச்சி: காவல்துறை வளாகத்தில் நால்வர் குத்திக்கொலை

வெள்ளி, 4 அக்டோபர் 2019 (13:21 IST)
பிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் ஒருவர் மூன்று காவல்துறை அதிகாரிகள் உள்பட நால்வரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
பெயர் வெளியிடப்படாத தாக்குதலாளி நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது வளாகத்தில் இருந்த மற்ற ஊழியர்கள், பயத்தில் காவல்துறை வளாகத்தில் இருந்து கண்களில் கண்ணீருடன் அலறியடித்து கொண்டு ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
தங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டி வரும் பிரான்ஸ் காவல்துறையினர், தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட அடுத்த தினமே இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
 
இதுகுறித்த வழக்கு விசாரணை உடனடியாக தொடங்கியுள்ளது. தாக்குதலாளியின் நோக்கம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. எனினும், பணியிடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த உயிர் பறிக்கும் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் விபத்து! – நோயாளி – டிரைவர் பரிதாப பலி!