Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாசனைகளை முகர முடியாததும், சுவை இழப்பதும் கொரோனா அறிகுறியா?

Advertiesment
Coronavirus
, வியாழன், 2 ஏப்ரல் 2020 (16:07 IST)
வாசனைகளை முகர முடியாமல் போவதும், உணவுப் பொருட்களின் சுவைகளை அறிய முடியாமல் போவதும்கூட கொரோனா தொற்றின் (கோவிட்-19) அறிகுறிகள் என்பது பிரிட்டன் ஆய்வாளர்களின் கூற்று. தங்களுக்கு கோவிட் -19இன் அறிகுறிகள் இருக்கலாம் என்று நினைத்து, அறிகுறிகளை ஒரு செயலியில் பதிவிட்ட நான்கு இலட்சம் மக்களின் தகவல்களை லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரி குழு ஒன்று ஆய்வு செய்தது.

ஆனால், இவ்வாறு வாசங்களை முகர முடியாமல் போவதும், சுவை உணர்வை இழப்பதும், சாதாரண சளி போன்ற ஏனைய சுவாசப் பிரச்சனைகளின் அறிகுறிகளாக இருப்பவையே. காய்ச்சலும், இருமலுமே, இந்த வைரஸ் தாக்குதலின் முக்கிய அறிகுறிகள் என்றும், அவை இருக்கிறதா என்று கவனித்து, தக்க நடவடிக்கைளை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உங்களுக்கோ, உங்கள் வீட்டில் வசிப்பவருக்கோ, சமீப காலத்தில் தொடர் இருமல் மற்றும் அதிக காய்ச்சல் இருந்தால், பிறருக்கு கொரோனாவை பரப்புவதை தடுக்கும் விதமாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. கோவிட்-19 வைரஸின் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிக்கும் செயலியில் மக்கள் இட்ட பதிவுகளில் 53% பேர் தங்களுக்கு உடல் சோர்வு இருப்பதாகவும், 29% பேர் தொடர் இருமல் இருப்பதாகவும், 28% சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகவும், 18% பேரால் வாசனைகளை முகரவோ, உணவின் சுவையை அறியவோ முடியவில்லை என்றும், 10.5% பேர் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்கள்.

இந்த செயலியை பயன்படுத்திய நான்கு லட்சம் பேரில், 1702 பேருக்கு கொரோனாவிற்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 579 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளதோடு, 1123 பேருக்கு வைரஸ் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில், கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளவர்களில், 59% பேர், தங்களால் வாசனைகளை முகர முடியவில்லை என்றும், உணவின் சுவை தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள்.

அப்படியென்றால், உணவின் சுவையை அறிய முடியாத நிலையையும், வாசனையை முகர முடியாத நிலையையும், கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாக சேர்க்க வேண்டுமா?
அவ்வாறு சேர்ப்பதற்குப் போதிய அளவில் ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பிரிட்டன் பொது சுகாதாரத்துறையும், உலக சுகாதார நிறுவனமும் இவற்றை இன்னும் பட்டியலில் சேர்க்கவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?