தவிர்க்க முடியாத காரணத்தால் 144 தடையை மீறி வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்.
கொரோனா தொற்றை குறைக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிறப்பு, இறப்பு, திருமணம், உடல்நலக் குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளால் வெளியே செல்வோர் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்.
1. சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வோர் மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும்.
2. சென்னையிலேயே ஒரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்திற்கு செல்வோர், மண்டல அதிகாரியிடம் அனுமதி பெறு வேண்டும்.
3. மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், வேறு மாவட்டங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
4. மாவட்டத்திற்குள்ளேயே பயணம் செய்ய வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.