Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் கண்டனம்!

Advertiesment
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் கண்டனம்!
, சனி, 12 மே 2018 (18:21 IST)
சிரியாவுக்குள் இருக்கும் இரானின் ராணுவ கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்ட பின்னர், தங்களது இறையாண்மையை தற்காத்து கொள்ளும் உரிமைக்கு சிரியாவுக்கு இருப்பதாக இரான் தெரிவித்திருக்கிறது.
 
வியாழக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களுக்கு பின்னர் முதல்முறையாக இரான் தெரிவித்திருக்கும் கண்டனத்தில், இந்த தாக்குதல் சிரியாவின் இறையாண்மையின் மீதான அப்பட்டமான உரிமை மீறல் என்று கூறியுள்ளது.
 
இவை, பல தசாப்தங்களுக்கு பிறகு சிரியா மீது இஸ்ரேலால் நடத்தப்பட்ட மிக கடுமையான தாக்குதல்களாகும். ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸிலுள்ள இஸ்ரேலிய ராணுவ நிலைகளின் மீது 20 ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 
இரானிய புரட்சிகர ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதனை நேரடியாக உறுதி செய்யாத அல்லது மறுக்காத இரான், ஒருதலைபட்சமான, அடிப்படையற்ற சாக்குப்போக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல்கள் என்று தெரிவித்துள்ளது.
 
சிரியாவின் ராணுவத்தின் ஆலோசகர்களாக செயல்பட நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை இரான் சிரியாவில் நிலைநிறுத்தியுள்ளது. இரானால் பயிற்சியளிக்கப்பட்டு, நிதி ஆதரவு அளிக்கப்படும் தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கானோர் சிரிய படையினருடன் சேர்ந்து கிளர்ச்சிப் படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.
 
வியாழக்கிழமை நடைபெற்ற கோலன் ஹைட்ஸ் தாக்குதலுக்கு பதிலடியாக சுமார் 70 இலக்குகளான சிரியாவின் ராணுவ கட்டுமான வசதிகளில் ஏறக்குறைய எல்லாவற்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. 2011ம் ஆண்டு சிரியா உள்நாட்டு போர் தொடங்கிய பின் இஸ்ரேல் நடத்துகின்ற மிக பெரிய தாக்குதல் இதுவாகும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்லூர் ராஜூவை எதிர்த்து தெர்மாகோல் விட்டு போராட்டம்!