Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேனில் எந்தெந்த பகுதிகளில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது?

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (23:50 IST)
யுக்ரேனில் நடைபெற்றுவரும் சண்டையால் மோசமாக பாதிக்கப்பட்ட 6 பகுதிகளில், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அங்கு 12 மணிநேர போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதித்துள்ளதாக, யுக்ரேன் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி அங்கிருந்து யாரேனும் பாதுகாப்பாக வெளியேற முடிகிறதா என்பதை நாம் இனிதான் பார்க்க வேண்டும்.
 
இதுதொடர்பாக, யுக்ரேன் துணை பிரதமர் இரினா வெரெஸ்சுக் கூறுகையில், உள்ளூர் நேரப்படி 09:00 மணிமுதல் 21:00 மணி வரை, சண்டையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஆறு பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்ய அதிபர் மாளிகை சம்மதித்துள்ளதாக தெரிவித்தார்.
 
அதன்படி, மனிதநேய வழித்தடங்கள் திறக்கப்படும் ஆறு பகுதிகள்:
 
வோல்னோவாகாவில் இருந்துக்
அதேபோன்று கீயவை சுற்றியுள்ள வோர்ஸெல், போரோடியான்கா, புச்சா, இர்பின், ஹோஸ்டோமெல் உள்ளிட்ட பல நகரங்களிலிருந்து வழித்தடங்கள் அமைக்கப்படும்.
 
ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிக்கைல் மிசிண்ட்செவ் போர் நிறுத்தத்தின்போது, ரஷ்யப் படைகள் “அமைதியைக் கடைபிடிக்கும்” என தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக, போர் நிறுத்தத்திற்கான இரு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனினும், செவ்வாய்க்கிழமை சுமியிலிருந்து சுமார் 7,000 பேர் வெளியேறியுள்ளதாக முன்னதாக தெரிவித்திருந்தோம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments