Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடா சூறாவளி 240 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (09:53 IST)
சென்ற வார இறுதியில் மெக்சிக்கோ வளைகுடாவில் உருவான ஐடா சூறாவளி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கரையைக் கடந்துள்ளது.

இந்தச் சூறாவளி கரையை கடந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 240 கிலோ மீட்டர் இருந்தது. ஐடா சூறாவளி கரையை கடந்து உள்ளதால் சுமார் 5 லட்சம் பேருக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
 
ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். வெளியேறாதவர்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் கத்ரீனா சூறாவளி 2005ஆம் ஆண்டு கத்ரினா சூறாவளி தாக்கியபொழுது சுமார் 1800 பேர் உயிரிழந்தனர்.
 
அதன்பின்பு அங்கு வெள்ளப் பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அந்தக் கட்டமைப்புகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பது ஐடா சூறாவளி கடக்கும்போது தெரியும்.
 
ஐடா கத்ரீனாவை விடவும் வலுவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளுக்கு அப்பாலும் பெரிய பேரழிவை உண்டாக்கக்கூடிய உயிர் அச்சுறுத்தலாக ஐடா சூறாவளி இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments