Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டினி கிடக்கும் பாம்புகள் - வருவாயின்றி தவிக்கும் கிண்டி பாம்பு பண்ணை

Advertiesment
Snakes
, வெள்ளி, 16 ஜூலை 2021 (10:46 IST)
சென்னை கிண்டி பாம்பு பண்ணையில் உள்ள பல விதமான ஊர்வனைகளில் இவைகளும் ஒன்று.கிண்டி பூங்காவில் பல்லிகள், முதலைகள் பாம்புகள் என பல விதமான ஊர்வனைகள் உள்ளன.
 
தயாரிப்பாளர் & செய்தியாளர்: ஆ விஜயானந்த்
 
ஒளிப்பதிவாளர் & படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
 
"இங்கு சுமார் 10 நல்ல பாம்புகள், 6 கண்ணாடி விரியன், 8 விரியன் பாம்புகள், 6 சுருட்டை விரியன், வெளி நாடுகளில் இருந்து வந்த 4 கோப்ரா பாம்புகள், மலைப்பாம்பு மற்றும் மலைப்பாம்பு குட்டிகள் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் உணவாக வாரத்திற்கு 80 - 150 எலிகள் தேவைப்படும்" என்கிறார் செல்வம், பாம்புப் பண்ணையின் பராமரிப்பாளர்.
 
இந்த பாம்புப் பண்ணைதான் இந்தியாவின் முதல் ஊர்வன பூங்கா.
 
அமெரிக்காவில் பிறந்த இந்திய ஊர்வனவியல் ஆய்வாளர் ரோமுலஸ் விட்டேகர் இதனை 1972ஆம் ஆண்டு தொடங்கினார்.
 
தற்போது போதிய பார்வையாளர்கள் இல்லாததால் வருமானமின்றி தற்போது சிக்கலில் உள்ளது இந்த பூங்கா.
 
"பார்வையாளர்கள் செலுத்தும் கட்டணம் தான் இந்த பூங்காவின் முக்கிய வருமானம். 2020ல் ஒன்பது மாதங்களும், 2021ல் மூன்று மாதங்களும் இந்த பண்ணை மூடப்பட்டது. பார்வையாளர்கள் யாரும் இல்லை. ஒரு ஆண்டுக்கான ஒட்டுமொத்த வருமானத்தையும் இழந்துவிட்டோம்" என்கிறார் சென்னை பாம்புப்பண்ணை அறக்கட்டளையின் துணை இயக்குநர் எஸ். ஆர். கணேஷ்.
 
இங்கு சில பணியாளர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
 
இங்குள்ள பாம்புகள், ஊர்வனைகளுக்கு தினமும் உணவு வழங்க இவர்கள் போராடி வருகின்றனர்.
 
"சுமார் 18 ஊழியர்கள் இங்கு இருந்தார்கள். அதில் 8 - 9 பேரை பணி நீக்கம் செய்துவிட்டனர். பாம்புகளை பராமரிக்கும் ஒரு ஆறு ஏழு பேரை மட்டும் பணியில் வைத்திருக்கிறார்கள்" என்கிறார் பாம்புப் பண்ணையின் பராமரிப்பாளர் செல்வம்.
 
அழியும் நிலையில் இருக்கும் பாம்புகள் மற்றும் .முதலைகளுக்கு இந்தப் பண்ணைதான் இனப்பெருக்க மையமாக திகழ்கிறது. கடந்த ஆண்டு கூட ஆபத்தான அழியும் நிலையில் இருக்கும் கேன்ஜெடிக் கரியல் என்ற முதலை இங்கு இனப்பெருக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
 
"குறைந்த வருமானத்தால் கடந்த ஓராண்டாக வாரம் ஒரு முறைதான் விலங்குகளுக்கு உணவு கொடுத்து வருகிறோம். இது மிகவும் வருத்தமாக உள்ளது. பாம்புகளும் மனிதர்களைபோலத்தான். அவற்றுக்கும் உணவு தேவைப்படும். பாம்புகள் வாழ்ந்தால்தான், நமக்கு வாழ்வும் வாழ்வாதாரமும் இருக்கும்" என்கிறார் பாம்புப் பண்ணையின் பராமரிப்பாளர் செல்வம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெர்மனியை திருப்பிப் போட்ட் வெள்ளம்… இதுவரை 40 பேர் பலி!