ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின் அமெரிக்காவுடன் ஒரு நீடித்த வணிக ஒப்பந்தத்தை பிரிட்டன் பெறும் என தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் மூன்று நாட்கள் அரச பயணமாக பிரிட்டன் சென்றுள்ளனர்.
பிரிட்டன் அரசி எலிசபெத்தை நேற்று சந்தித்த டிரம்ப், இன்று தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றினார். டிரம்பின் பயணத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் தெரீசா மேயால் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
ஹூவாவே என்கிற சீன நிறுவனத்தோடு வணிகம் நடத்துவதை முதன்மையாக கொண்டு, இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வணிக நிறுவனங்களின் தலைவர்களுடன் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கூட்டம்
டவுனிங்ஸ்டீரீட் அலுவலகத்தில் அதிபர் டிரம்புடன் நடைபெறும் கூட்டத்தின்போது, பிரிட்டனின் பருவநிலை மாற்றம் மற்றும் இரான் தொடர்பான பிரிட்டனின் நிலைப்பாடு பற்றி தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில், ஐந்து பிரிட்டன் மற்றும் 5 அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட காலை உணவுடனான கூட்டம் செயிண்ட் ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் இடையில் மேலதிக வர்த்த விரிவாக்கம் செய்யும் சாத்தியம் நிலவுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில், அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து பணியாற்ற பெரும் வாய்ப்புகள் நிலவுவதாக தெரீசா மே தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமரின் அலுவலகம் அமைந்திருக்கும் டவுணிங் ஸ்டீட் வந்தடையும் அதிபர் டிரம்பும், அமெரிக்க முதல் பெண்மணியும்.
சுற்றுச்சூழல் அமைச்சருக்கு நெருக்கமான வட்டார தகவலின்படி, கன்சர்வேட்டிவ் தலைமை மைக்கேல் கோவ்வுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளுவதற்கு முன்னால், மைக்கேல் கோவ்-வுக்கு போட்டியாளராக விளங்கும் போரிஸ் ஜான்சன் பிரதமராக வர வேண்டுமென விரும்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை அதிபர் டிரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் போராட்டங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.