Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனு பாக்கர் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது எப்படி?

மனு பாக்கர் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது எப்படி?
, ஞாயிறு, 25 ஜூலை 2021 (13:12 IST)
”நீங்கள் பல வருடங்களாக கார் ஓட்டுகிறீர்கள் ஒன்றும் ஆகவில்லை. அதன் பின் ஒரு நாள் உங்கள் கார் பஞ்சரானால் அது உங்கள் தவறா? ஆனால் நீங்கள் அதை எதிர்கொள்ளதான் வேண்டும்,” என்கிறார் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் ரெளநக் பண்டிட்.

ஒலிம்பிக் போட்டியில் இறுதி சுற்றுக்கு மிக நெருக்கத்தில் இருந்த மனு பாக்கர் அந்த வாய்ப்பை தவறவிட்டது எப்படி என்பதைதான் இவ்வாறு விவரிக்கிறார் அவரின் பயிற்சியாளர்.

ஒலிம்பிக் போட்டியின் மூன்றாவது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர் 12ஆவது இடத்தை பிடித்தார்.

மனு பாக்கர் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது எப்படி?

முதலாவது சுற்றில் சிறப்பாக விளையாடிய மனு பாக்கருக்கு இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பிஸ்டலின் லிவர் உடைந்து போனது. அதை சரி செய்ய அவருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.

மனுவிடம் மற்றொரு துப்பாக்கி இருந்தது இருப்பினும் அதற்கு மாறுவதற்கு சில நேரங்கள் பிடிக்கும் என்கிறார் பயிற்சியாளர்.

மனு பாக்கர் அதனை கடந்து வந்தாலும் இறுதிச் சுற்றுக்கு செல்ல தேவையான புள்ளிகளை பெற முடியவில்லை.

“லிவர் என்பது துப்பாக்கியை லோட் செய்வதற்கான பேரலை திறக்க உதவும். அது உடைந்தால் உங்களால் சுட முடியாது,” என்கிறார் ரெளநக். “மாற்று துப்பாக்கியை பயன்படுத்தலாம் ஆனால் அதற்கேற்றாற்போல் அனைத்தையும் மாற்றம நேரம் எடுக்கும்.
இது அனைத்தையும் கடந்து இறுதிச் சுற்று வாய்ப்பை வெறும் இரு புள்ளிகளில்தான் தவறவிட்டுள்ளார் மனு பாக்கர்” என்கிறார் பயிற்சியாளர்.

“பொதுவாக இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவது அரிது. இருப்பினும் இது துரதிஷ்டவசமானது” என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மக்கள் இயக்க கூட்ட ஆலோசனை; விஜய் பங்கேற்கவில்லை என தகவல்!