Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

பள்ளியில் இந்தி திணிப்பு - பெல் வளாகத்தில் முற்றுகைப் போராட்டம்!

Advertiesment
பெல் வளாகம்
, செவ்வாய், 28 ஜூன் 2022 (16:01 IST)
பெல் வளாகத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் இந்தி திணிப்பு எனக்கூறி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 

 
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் (BHEL) நிறுவன வளாகத்தில் ஆர்.எஸ்.கே பள்ளி மற்றும் பெப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. பெல் நிர்வாகம் தோன்றியபோது அதன் முதல் செயலாண்மை இயக்குனராக இருந்த ஆர்.எஸ். கிருஷ்ணனின் நினைவாக ஆர்.எஸ்.கே. என்ற பெயரில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
 
இந்தப் பள்ளியில் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஆர்எஸ்கே பள்ளியை நிர்வகிக்க 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் கல்வி நிறுவனங்கள் ஒப்பந்தம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது ஆர்.எஸ்.கே., பள்ளியைடி.ஏ.வி., எனப்படும் தயானந்த ஆங்கில வேதிக் பள்ளி 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து பள்ளியை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில் பள்ளியில் இந்தி மொழியில் நமஸ்தே நமஸ்காரம் சொல்லும் வழக்கத்தை திணிப்பதைக் கண்டித்தும் மதம் சார்ந்த கடவுள் வழிபாட்டை ஊக்குவிப்பதற்கும்தமிழ் பாடத்தைத் தடை செய்யும் போக்கு, இந்தி மொழி திணிப்பு, சிப்ட் முறையில் வகுப்புகள் ஆகியவற்றைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்ற திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் கபிலன் தலைமையில் ஆர் எஸ் கே பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படலாம் என போலீசார் கூறியதையடுத்து சமரச பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
 
இந்த முற்றுகைப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், திராவிட கழகம், மதிமுக மற்றும் தமிழ் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலரா பரவல் அதிகரிப்பு.....பானி பூரி விற்பனைக்கு தடை !