Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹிமாச்சலப் பிரதேச நிலச் சரிவில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு

Advertiesment
ஹிமாச்சலப் பிரதேச நிலச் சரிவில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு
, வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (14:02 IST)
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய உயிரிழந்த 13 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

 
பியோ - ஷிம்லா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வாகனங்கள் சிக்கின. அப்போது ஷிம்லா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் பயணம் செய்த சுமார் 30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
 
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 
நிலச்சரிவு ஏற்பட்ட சாலையில் இடிபாடுகள் அகற்றப்பட்டு விட்டன. எனினும் போக்குவரத்து தொடங்கவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவினர் வளர்ச்சியை மைனஸில் தள்ளிவிட்டனர்! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!