பிரசவம் நடந்த 30 நிமிடங்களில் மருத்துவமனையில் தேர்வு எழுதிய பெண்!

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (12:44 IST)
எத்தியோப்பியாவில் உள்ள ஓர் பெண் ஆண் குழந்தையை பிரசவித்த அரை மணி நேரத்துக்கு பின் மருத்துவமனை படுக்கையிலேயே தனது தேர்வுகளை எழுதியுள்ளார்.
 
21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவம் நடப்பதற்கு முன்னரே தேர்வுகளை முடித்து விட தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ஜான் காரணமாக அவரது உயர்நிலைப் பள்ளித் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
 
திங்கள் கிழமையன்று அவருக்கு தேர்வுகள் நடப்பதற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது தேர்வுகளை எழுதினர்.
 
கர்ப்பிணியாக இருக்கும்போது படிப்பது ஒன்றும் பிரச்சனையாக இருக்கவில்லை. அடுத்த ஆண்டு வரை நான் தேர்ச்சி பெற காத்திருக்க விரும்பவில்லை என்றார்.
 
ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை திங்கள் கிழமையன்று மருத்துவமனையில் எழுதினார். அடுத்த இரண்டு நாள்களில் நடக்கும் தேர்வுகளை அவர் தேர்வு மையத்துக்குச் சென்று எழுதவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments