Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எலான் மஸ்க் குழந்தைக்கு X Æ A-12 என்ற பெயர் ஏன்?

Advertiesment
எலான் மஸ்க் குழந்தைக்கு X Æ A-12 என்ற பெயர் ஏன்?
, வியாழன், 7 மே 2020 (14:35 IST)
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், தனக்கும் தனது பெண் தோழிக்கும் பிறந்த குழந்தைக்கு X Æ A-12 என பெயர் சூட்டியுள்ளார்.
 
எலான் மஸ்க் மற்றும் பாடகியான கிரைம்ஸுக்கு திங்களன்று குழந்தை பிறந்திருப்பதாக மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் குழந்தைக்கு X Æ A-12 என்று பெயர் வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த பெயர் ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது. மேலும் இதை எப்படி அழைப்பது என்றும் பலர் கேள்வி கேட்டுள்ளனர்.
 
ட்விட்டரில் பொதுவாக நகைச்சுவையாக பதிவிடும் வழக்கம் கொண்ட எலான் மஸ்க், இதுகுறித்தும் நகைச்சுவை செய்கிறார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் பின்னர் பாடகி கிரைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையின் பெயருக்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
 
ஆங்கிலத்தில் a மற்றும் e-யின் கலவையே Æ. இதனை 'ash' என்றும் கூறுவர் இது லத்தீன் மொழியில் உள்ளது. இருப்பினும் டென்மார்க் நார்வே மற்றும் ஐஸ்லாந்தில் இது எழுத்தாகவும் கருதப்படுகிறது.
 
A-12 என்பது சி.ஐ.ஏ-வுக்காக வடிவமைக்கப்பட்ட போர் விமானத்தின் பெயர். இருப்பினும் இது அனைத்தையும் எவ்வாறு உச்சரிப்பது என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. மேலும் இந்த பெயரை எலன் மஸ்க் வாழும் கலிஃபோர்னியாவில் பதிவு செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. அங்கு சாதரண எழுத்துகளை கொண்ட பெயர்களையே பதிவு செய்திட முடியும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதில் பின்னடைவு