Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை கிரிக்கெட்: பரிசுத் தொகை, சென்னையில் ஆடும் அணிகள் விவரம்

உலகக் கோப்பை கிரிக்கெட்: பரிசுத் தொகை, சென்னையில் ஆடும் அணிகள் விவரம்
, திங்கள், 2 அக்டோபர் 2023 (19:12 IST)
13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இதற்கு முன்பே, 1987, 1996, 2011ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றிருந்தாலும் பிற நாடுகளுடன் இணைந்தே அந்த தொடர்களை இந்தியா நடத்தியது. தற்போது முதன்முறையாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது.
 
கடைசியாக நடைபெற்ற மூன்று 50 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் போட்டியை நடத்திய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, இந்த முறை தொடரை நடத்தும் இந்திய அணி கோப்பையை வசமாக்குமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.
 
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றன. இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றன.
 
உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 1983 போல வலுவான வேகப் பந்துவீச்சு கோப்பையை வென்று தருமா?
1 அக்டோபர் 2023
உலகக்கோப்பை: 174 பந்துகளில் 36 ரன் எடுத்த கவாஸ்கர் - என்ன சொன்னார் தெரியுமா?
 
ரௌண்ட் ராபின் முறையில் நடைபெறும் ஆட்டங்கள்
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை போலவே இந்த தொடரிலும் ரௌண்ட் ராபின் முறையில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி, ஒவ்வொரு அணியும் மீதமுள்ள 9 அணிகளுடன் ஒருமுறையேனும் விளையாடும்.
 
9 ஆட்டங்களில் 7 ஆட்டங்களில் வெற்றி பெறுவதன் மூலம் ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். ரௌண்ட் ராபின் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
 
ரௌண்ட் ராபின் சுற்றில் முதல் இடத்தை பிடிக்கும் அணியும் 4வது இடத்தை பிடிக்கும் அணியும் முதல் அரையிறுதிச் சுற்றில் விளையாடும். 2வது, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் 2வது அரையிறுதிப் போட்டியில் விளையாடும். அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் நவம்பர் 19ஆம் தேதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும்.
 
மழை காரணமாக அரையிறுதி, இறுதிப் போட்டிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அவற்றுக்கு மட்டும் ரிசர்வ் டே உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அஸ்வின்: டெஸ்ட் வீரர் என்று ஒதுக்கப்பட்டவர் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வானது எப்படி?
30 செப்டெம்பர் 2023
சிவாஜி நடிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன வேடம் என்ன?
1 அக்டோபர் 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023பட மூலாதாரம்,GETTY IMAGES
உலகக் கோப்பை கிரிக்கெட் - பரிசுத் தொகை எவ்வளவு?
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 83.06 கோடி ஆகும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு பரிசாக ரூ.33.22 கோடி வழங்கப்படும். இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு ரூ.16.61 கோடி வழங்கப்படும். அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறும் இரு அணிகளுக்கும் தலா ரூ.6.64 கோடி வழங்கப்படும்.
 
இதுபோக, அரையிறுதிக்கு தகுதிபெறாமல் லீக் ஆட்டங்களின் முடிவில் வெளியேறும் 6 அணிகளுக்கும் தலா ரூ. 83 லட்சம் வழங்கப்படும். லீக் சுற்றைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றிபெறும் அணிக்கு ரூ. 33 லட்சம் வழங்கப்படும்.
 
இந்தியாவில் 10 மைதானங்களில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மைதானங்களில் தலா ஐந்து ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் மட்டும் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. எந்தெந்த மைதானங்களில் எந்த அணிகள் விளையாடும் போட்டிகள் நடைபெறுகின்றன என்பதை கீழ் பார்ப்போம்.
 
 
எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்த முறை இந்திய அணி விளையாடும் ஒரு ஆட்டம் உட்பட 5 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
 
இந்தியா – ஆஸ்திரேலியா, அக்டோபர் 8ஆம் தேதி
நியூசிலாந்து – வங்கதேசம், அக்டோபர் 14ஆம் தேதி
நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான், அக்டோபர் 18ஆம் தேதி
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், அக்டோபர் 23ஆம் தேதி
பாகிஸ்தான்– தென் ஆப்ரிக்கா, அக்டோபர் 27ஆம் தேதி
நரேந்திர மோதி மைதானம், ஆமதாபாத்
இங்கிலாந்து - நியூசிலாந்து, அக்டோபர் 5ஆம் தேதி
இந்தியா - பாகிஸ்தான், அக்டோபர் 14ஆம் தேதி
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா, நவம்பர் 4ஆம் தேதி
 
தென் ஆப்ரிக்கா - ஆப்கானிஸ்தான், நவம்பர் 10ஆம் தேதி
இறுதிப் போட்டி, நவம்பர் 19ஆம் தேதி
 
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான், அக்டோபர் 20ஆம் தேதி
இங்கிலாந்து - இலங்கை, அக்டோபர் 26ஆம் தேதி
நியூசிலாந்து - பாகிஸ்தான், நவம்பர் 4ஆம் தேதி
நியூசிலாந்து - இலங்கை, நவம்பர் 9ஆம் தேதி
இந்தியா - நெதர்லாந்து, நவம்பர் 12ஆம் தேதி
ஸீலாண்டியா: கடலுக்கடியில் 50 லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் எட்டாவது கண்டமா? ஆய்வுகள் கூறுவது என்ன?
30 செப்டெம்பர் 2023
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பூஜ்ஜியமாக்கும் 'பையில் அடங்கக்கூடிய' சிறிய காற்றாலை
26 செப்டெம்பர் 2023
 
தென் ஆப்ரிக்கா - இலங்கை, அக்டோபர் 7ஆம் தேதி
இந்தியா - ஆப்கானிஸ்தான், அக்டோபர் 11ஆம் தேதி
இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான், அக்டோபர் 15ஆம் தேதி
ஆஸ்திரேலியா - நெதர்லாந்து, அக்டோபர் 25ஆம் தேதி
வங்கதேசம் - இலங்கை, நவம்பர் 6ஆம் தேதி
ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம், தர்மசாலா
வங்கதேசம் - ஆப்கானிஸ்தான், அக்டோபர் 7ஆம் தேதி
இங்கிலாந்து - வங்கதேசம், அக்டோபர் 10ஆம் தேதி
தென் ஆப்ரிக்கா - நெதர்லாந்து, அக்டோபர் 17ஆம் தேதி
இந்தியா - நியூசிலாந்து, அக்டோபர் 22ஆம் தேதி
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து, அக்டோபர் 28ஆம் தேதி
 
நெதர்லாந்து - வங்கதேசம் , அக்டோபர் 28ஆம் தேதி
பாகிஸ்தான் - வங்கதேசம் , அக்டோபர் 31ஆம் தேதி
இந்தியா - தென் ஆப்ரிக்கா, நவம்பர் 5ஆம் தேதி
இங்கிலாந்து - பாகிஸ்தான், நவம்பர் 11ஆம் தேதி
2வது அரையிறுதி, நவம்பர் 16ஆம் தேதி
பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயி கிரிக்கெட் மைதானம், லக்னோ
ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா, அக்டோபர் 12ஆம் தேதி
ஆஸ்திரேலியா - இலங்கை, அக்டோபர் 16ஆம் தேதி
நெதர்லாந்து - இலங்கை, அக்டோபர் 21ஆம் தேதி
இந்தியா - இங்கிலாந்து, அக்டோபர் 29ஆம் தேதி
நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான், நவம்பர் 3 ஆம் தேதி
 
இந்திய எல்லையில் பாகிஸ்தான் குவிக்கும் அணு ஆயுதங்கள் எவ்வளவு தூரம் தாக்கும்?
 
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023பட மூலாதாரம்,GETTY IMAGES
 
இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா, அக்டோபர் 21ஆம் தேதி
தென் ஆப்ரிக்கா - வங்கதேசம், அக்டோபர் 24ஆம் தேதி
இந்தியா - இலங்கை, நவம்பர் 2ஆம் தேதி
ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான், நவம்பர் 7ஆம் தேதி
முதல் அரையிறுதி, நவம்பர் 15ஆம் தேதி
 
இந்தியா - வங்கதேசம், அக்டோபர் 19ஆம் தேதி
ஆப்கானிஸ்தான் - இலங்கை, அக்டோபர் 30ஆம் தேதி
நியூசிலாந்து - தென் ஆப்ரிக்கா, நவம்பர் 1ஆம் தேதி
இங்கிலாந்து - நெதர்லாந்து, நவம்பர் 8ஆம் தேதி
ஆஸ்திரேலியா - வங்கதேசம், நவம்பர் 11ஆம் தேதி
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்
பாகிஸ்தான் - நெதர்லாந்து, அக்டோபர் 6ஆம் தேதி
நியூசிலாந்து - நெதர்லாந்து, அக்டோபர் 9 ஆம் தேதி
பாகிஸ்தான் - இலங்கை, அக்டோபர் 10ஆம் தேதி
 
இந்தியா அணி விளையாடும் ஆட்டங்கள்
இந்தியா – ஆஸ்திரேலியா, அக்டோபர் 8ஆம் தேதி (சென்னை)
இந்தியா- ஆப்கானிஸ்தான், அக்டோபர் 11ஆம் தேதி (டெல்லி)
இந்தியா - பாகிஸ்தான், அக்டோபர் 15-ம் தேதி (ஆமதாபாத்)
இந்தியா - வங்கதேசம், அக்டோபர் 19ஆம் தேதி (புனே)
இந்தியா - நியூசிலாந்து, அக்டோபர் 22ஆம் தேதி (தர்மசாலா)
இந்தியா - இங்கிலாந்து, அக்டோபர் 29ஆம் தேதி (லௌக்னோ)
இந்தியா - இலங்கை, நவம்பர் 2ஆம் தேதி (மும்பை)
இந்தியா - தென் ஆப்ரிக்கா, நவம்பர் 5ஆம் தேதி (கொல்கத்தா)
இந்தியா- நெதர்லாந்து, நவம்பர் 12ஆம் தேதி (பெங்களூரு)
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்
கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டமான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் ஆட்டம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
 
50 ஓவர் உலகக் கோப்பையை பொருத்தவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வென்றது இல்லை. 7-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த சாதனையை தொடர இந்திய அணி முயற்சிக்கும்.
 
அதே நேரம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சு ஆகியவற்றில் வலுவாக இருப்பதால் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் வெற்றியை ருசிக்க அந்த அணி தீவிரமாக போராடும்.
 
 
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷண், சூர்யகுமார் யாதவ்.
 
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் உட், கிறிஸ் வோக்ஸ்.
 
ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரி, கேம்ரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.
 
பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம்.
 
நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, வில் யங்.
 
வங்கத் தேசம்: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, தௌஹித் ஹிருதாய், மெஹதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது, முஸ்தபிஸுர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அஹமது, மெஹதி ஹாசன், தன்ஸித் ஹசன், தன்ஸிம் ஹசன், மஹ்மதுல்லா.
 
இலங்கை: தசுன் ஷானகா (கேப்டன்), பதும் நிசங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசால் பெரேரா, தனஞ்ஜெயா டி சில்வா, சரித் அசலங்கா, சதீரா சமரவிக்ரமா, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரனா, கசுன் ரஜிதா, துஷான் ஹேமந்தா, லஹிரு குமாரா, தில்ஷன் மதுஷங்கா
 
ஆப்கானிஸ்தான்: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷீத் கான், முஜீப் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹாக் பரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக்.
 
தென் ஆப்ரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்டு கூட்ஸி, குயிண்டன் டி காக், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ யான்சென், ஹென்ரிச் கிளாஸன், அன்டிலே பெஹ்லுவாயோ , கேஷவ் மஹாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, லிஸாட் வில்லியம்ஸ் , ககிசோ ரபாடா, ஷம்ஸி, வேன் டர் டுசென்
 
நெதர்லாந்து: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), காலின் அக்கர்மென், ஷாரிஸ் அஹமது, வெஸ்லே பார்ரெசி, லோகன் வான் பீக், ஆர்யன் தத், சைபிரண்ட் ஏங்கல்பிரச், ரையன் கிளின், பாஸ் டி லீட், பால் வான் மீகிரண், ரோலாஃப் வேன் டர் மெர்வ், தேஜா நிடாமனுரு, மேக்ஸ் ஓ'டாவ்ட், விக்ரம் சிங், சகிப் ஜுல்ஃபிகர்

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநில அளவிலான கேரம் போட்டியில் 24 பேர் வெற்றி