Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“எனக்கு இதெல்லாம் பழகிவிட்டது… “ விரக்தியை வெளிப்படுத்திய சஹால்!

Advertiesment
“எனக்கு இதெல்லாம் பழகிவிட்டது… “ விரக்தியை வெளிப்படுத்திய சஹால்!
, திங்கள், 2 அக்டோபர் 2023 (07:39 IST)
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழல்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இடம்பெறவில்லை. சமீபகாலமாகவே அவருக்கு இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவரே டிவிட்டரில் எமோஜிக்கள் மூலமாக தெரிவித்துள்ளார். அதில் விடியலுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரை எடுக்காதது மிகப்பெரிய தவறு என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் உலகக் கோப்பையில் எடுக்கப்படாதது குறித்து பேசியுள்ள யுஸ்வேந்திர சஹால் “உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது சற்று வருத்தம்தான். அதை கடந்து செல்ல வேண்டும் என்பதை என்னுடைய வாழ்க்கையில் கற்றுக் கொண்டுள்ளேன். இது போல 3 உலகக் கோப்பைகள் கடந்துவிட்டன.  இந்த மனநிலை எனக்கு பழகிவிட்டது” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Asian Games 2023: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்! – துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி!