Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ் மருந்திற்கான ஆய்வு: இந்தியா எப்படி பெரிய பங்கு வகிக்கிறது தெரியுமா?

Advertiesment
கொரோனா வைரஸ் மருந்திற்கான ஆய்வு: இந்தியா எப்படி பெரிய பங்கு வகிக்கிறது தெரியுமா?
, செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (15:02 IST)
அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் மருந்தை உருவாக்க பணியாற்றி வருவதாக நேற்று இரவு, அமெரிக்க உள்துறை அமைச்சரான மைக் பாம்பே கூறினார்.

இது முற்றிலும் ஆச்சரியம் அளிக்கும் வகையிலான தகவல் இல்லை.

ஏன் தெரியுமா?

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, நோய்களுக்கு மருந்து உருவாக்கும் ஒரு கூட்டு திட்டத்தை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செய்து வருகின்றன.
டெங்கு, இன்புளூவென்சா, காசநோய் ஆகியவற்றை குணப்படுத்த இவர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். டெங்குவிற்கான மருந்தை சோதித்து பார்க்கும் திட்டமும் வருங்காலத்தில் உள்ளது.

 
ஜெனரிக் மருந்துகளையும், நோய்களைக் குணப்படுத்தும் பல முக்கிய மருந்துகளையும் தயாரிக்கும் பெரிய உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் நோய்களுக்கான மருந்துகளை உருவாக்க ஆறு பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும், போலியோ, நிமோனியா, ரோட்டா வைரஸ், ருபெல்லா என பல நோய்களுக்கான மருந்துகளைத் தயாரித்து வரும் பல நிறுவனங்களையும் கொண்டுள்ள நாடு.

கோவிட்- 19 நோய்க்கான மருந்தை உருவாக்க, இந்தியாவில் தற்போது ஆறு பெரும் நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. இதில் ஒரு நிறுவனம் தான், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா. அதிக எண்ணிக்கையிலான மருந்துகளை தயாரித்து உலகளவில் விற்பனை செய்வதில் இந்த நிறுவனமே மிகப்பெரியதாகும்.

53ஆண்டுகள்..1.5 பில்லியன் மருந்துகள்

தொடங்கப்பட்டு 53ஆண்டுகள் ஆகியுள்ள இந்த நிறுவனம், ஆண்டுதோறும் 1.5 பில்லியன் மருந்துகளை தயாரிக்கிறது. இதன் பிரதான இரண்டு ஆலைகள் பூனேவின் மேற்குப்பகுதியில் உள்ளன. மேலும், இந்நிறுவனத்திற்கு, செக் குடியரசு மற்றும் நெதர்லாந்தில் இரண்டு சிறிய ஆலைகளும் உள்ளன. இந்த நிறுவனத்தில் மொத்தமாக ஏழாயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.

இந்த நிறுவனம், சுமார் 20 வகையான மருந்துகளை 165 நாடுகளுக்கு விநியோகிக்கிறது. அதன் 80% மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதில் சில மாத்திரைகள், ஒரு மாத்திரை 35 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. உலகளவில் பார்க்கும்போது, இது மிகவும் மலிவான விலை என கூற முடியும்.
webdunia
தற்போது, கோடாஜெனிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, ஒரு 'Live Attenuated' மருந்தைத் தயாரிக்க இந்நிறுவனம் முயன்று வருகிறது. இத்தகைய மருந்துகள் வைரஸ் மற்றும் பாக்டேரியாவிற்கு எதிராக போராடக்கூடியவை. இந்த மருந்துகளில், நோய் வைரஸ் மிகவும் வலுவிழந்த நிலையிலோ அல்லது அதன் தாக்கம் ஏற்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும். (அதனால், இந்த மருந்தை பயன்படுத்தும்போது, மேலும் நோய் பரவாமல் அல்லது மிகவும் குறைந்த தாக்கத்தைக் கொண்டு பரவும் வகையில் இருக்கும்.)

இத்தகைய மருந்தைத் தயாரிக்க, உலகளவில் 80க்கும் அதிகமான நிறுவனங்கள் தற்போது முயன்று வருகின்றன.

"இந்த மருந்தை மிருகங்களின் மேல் ஏப்ரல் மாதமே சோதிக்க திட்டமிட்டுள்ளோம். செப்டம்பர் மாதத்தில், மனிதர்கள் மீதான பரிசோதனையைத் தொடங்கி விடலாம் என நினைக்கிறேன்,"என்கிறார் அந்த நிறுவனத்தில் தலைமை இயக்க அதிகாரி அதர் பூனாவாலா.

ஐக்கிய ராஜ்ஜிய அரசால் நிதியுதவி அளிக்கப்பட்டு, ஆக்ஸ்போட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள மருந்தையும் அதிக அளவில் உற்பத்தி செய்ய இந்நிறுவனமே, அந்த பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளது.

மூலக்கூறில் மாற்றங்கள் செய்யப்பட்ட மனிதக்குரங்கின் வைரஸ் இந்த புதிய மருந்தின் அடித்தளமாக அமையும். வரும் வியாழக்கிழமை, இந்த மருந்தை மனிதர்கள் மீது சோதிக்கும் ஆய்வு தொடங்குகிறது. அனைத்து சரியாக நடந்தால், வரும் செப்டம்பர் மாதத்தில், இந்த மருந்தின் 10 லட்சம் டோஸ்களை உருவாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

பெருந்தொற்றிலிரிந்து நாம் முழுமையாக வெளியேற

webdunia
"இந்த பெருந்தொற்றிலிருந்து நாம் முழுமையாக வெளியேற, இந்த ஊரடங்கிலிருந்து வெளியேற நமக்கு இந்த மருந்தின் மேலும் பல லட்சக்கணக்கான டோஸ்கள் தேவை என்பது மிகத்தெளியாக தெரிகிறது," என்று பிபிசியின் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஜேம்ஸ் காலங்கரிடம் கூறினார் பேராசிரியர் ஏட்ரின் ஹில்.

இவர், ஆக்ஸ்போர்டில் ஜென்னர் இன்ஸ்டிட்யூட்டை நடத்தி வருகிறார். இந்த கண்டுபிடிப்பே, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு ஆரம்ப புள்ளியை அளித்தது. பூனாவாலாவின் நிறுவனத்தில் மட்டும், 400-500 மில்லியன் அதிக மருந்துகள் தயாரிப்பதற்கான வசதி இருக்கிறது.

"எங்களிடம் அதற்கான வசதி இருப்பதால், இதில் முதலீடு செய்தோம்." என்கிறார் அவர்.
இது மட்டுமல்ல, ஐதராபாத்தில் இயங்கும் பாரத் பியோடெக் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள ஃபுளூஜென் நிறுவனம் மற்றும், விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, அவர்கள் தயாரித்து வரும் மருந்தை 300 மில்லியன் டோஸ்கள் தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

webdunia

சைடஸ் காடிலியா இரண்டு மருந்துகளைத் தயாரிக்க ஆய்வு செய்து வருகிறது. அதேபோல, பையோலாஜிக்கல் ஈ, இந்தியன் இம்முனோலோஜிஸ்ட், மைனவாக்ஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களுக்கான மருந்துகளில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதேபோல, மேலும் நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களும் தங்கள் ஆய்வின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளன.

"இந்த மருந்தைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்பவர்களையும், அவற்றை தயாரிக்க முன்வரும் நிறுவனங்களுக்குமே இதற்கான பாராட்டுகள் போய் சேரவேண்டும். அந்த நிறுவனங்கள் தரமான முறையில், அதிக மருந்துகளைத் தயாரிக்க முதலீடு செய்கின்றன. இந்த நிறுவனங்களின் தலைவர்கள், தங்களின் வியாபாரத்தைச் சிறப்பாக தொடர்ந்து நடத்தும் அதே வேளையில், உலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது, மக்கள் அனைவருக்குமே நல்ல ஒரு எடுத்துக்காட்டு" என்கிறார் உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்.

இருப்பினும், விரைவில் கோவிட்-19 தொற்றுக்கான மருந்து சந்தைக்கு வந்து சேரும் என மக்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று துறை வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் உலக சுகாதாரம் துறையின் பேராசிரியரான டேவிட் நபரோ, 'வரும் சில காலங்களுக்கு' கொரோனாவின் அச்சுறுத்தலைச் சமாளித்தபடியே மக்கள் வாழ்ந்தாகவேண்டும், ஏனென்றால், நோய்த்தொற்றை சரிசெய்யக்கூடிய மருந்து வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் இதுவரை இல்லை என்று கூறுகிறார்.

வெர்மாண்ட் மெடிக்கல் செண்டர் பல்கலைக்கழகத்தில், ஆய்வாளராக உள்ள டிம் லஹே, 'கொரோனாவிற்காக தயாரிக்கப்படும் மருந்து என்பது, நம் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படவும் செயல்படலாம்' என்ற காரணமும் நமக்கு கவலை அளிக்கக்கூடியதாக அமையலாம் என எச்சரிக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழையை எதிர்ப்பார்க்கலாம்?