Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ் மற்றும் உடலுறவு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 தகவல்கள்

Advertiesment
கொரோனா வைரஸ் மற்றும் உடலுறவு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 தகவல்கள்
, செவ்வாய், 31 மார்ச் 2020 (22:05 IST)
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக கொரோனா தீவிரமாக உள்ள இந்த காலகட்டத்தில் உடலுறவு கொள்வது கூட கொரோனா பரவ காரணமாக மாறிவிடலாம் என்ற அச்சம் உள்ளது.

ஆனால் இது உண்மையா, பொய்யா என்பது குறித்து மருத்துவர் அலெக்ஸ் ஜார்ஜ் மற்றும் பாலுறவு செய்திகள் தொடர்பான பத்திரிக்கையாளரும் பிபிசி ரேடியோ 1 தொகுப்பாளருமான அலிக்ஸ் ஃபாக்ஸ் ஆகியோர் இணைந்து வழங்கிய விளக்கங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
 
  1. கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா?
  2. டாக்டர் அலெக்ஸ் ஜார்ஜ்உடலுறவு கொள்ளக் கூடிய இணையுடன், ஒரே வீட்டில் நீங்கள் வாழ்ந்து வந்தால், அது எந்த வகையிலும் உங்கள் அந்தரங்க வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

ஆனால் உங்கள் இருவரில் ஒருவருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் தோன்றினால், நீங்கள் இருவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வீட்டிற்குள்ளேயே உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழலில் உலகில் இருக்கும் அனைவரும், சொந்த வீடாக இருந்தால் கூட இரண்டு மீட்டர் இடைவெளி விட்டுத்தான் இருக்க வேண்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அது சாத்தியமா என்பது உறுதியாகக் கூற முடியாது.

படத்தின் காப்புரிமைPAUL COCHRANE/JESSIE WHEALEYImage captionஅலிக்ஸ் ஃபாக்ஸ் (இடது) மற்றும் அலெக்ஸ் ஜார்ஜ்

2. புதிய நபர்களுடன் உடலுறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்துமா?

டாக்டர் அலெக்ஸ் ஜார்ஜ்தற்போதைய சூழலில் புதிய இணையுடன் உடலுறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தாது எனக் கூற முடியாது. ஏனெனில் அந்த புதிய துணைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அவருடன் நெருக்கமாக இருக்கும்போது நீங்களும் அந்த வைரஸால் பாதிக்கப்படலாம்.

அலிக்ஸ் ஃபாக்ஸ்: எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமல், இந்த வைரஸ் மனிதர்களின் உடலிற்குள் வாழும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே சாதாரண முத்தம் கூட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவ காரணமாக இருந்துவிடக்கூடும்.
 
3.நான் சமீபத்தில் முத்தமிட்ட ஒரு நபர், சில நாட்களுக்குப் பிறகு கொரோனா
அறிகுறியுடன் காணப்படுகிறார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவர் அலெக்ஸ்நீங்கள் முத்தமிட்ட நபருக்கு, கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்படத் தொடங்குகிறது என்றால், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடல் அறிகுறிகளைக் கவனித்துக் கொண்டே இருங்கள். ஒருவேளை கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால், மேலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு உங்கள் நிலையை எடுத்துக் கூறுங்கள்.

அலிக்ஸ் ஃபாக்ஸ்: நாம் ஒவ்வொருவரும் நம்முடைய உறவு குறித்த பொறுப்புடையவர்கள். ஒருவேளை உங்களுக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் தெரியவரும் போது, சமீபத்தில் உங்களுடன் நெருக்கமான இருப்பவர்களுக்கு அது குறித்துத் தெரியப்படுத்த வேண்டியது உங்களது கடமை.

நீங்கள் நெருக்கமாக இருந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்து, உங்களுக்கு அந்த அறிகுறிகள் இல்லாவிட்டாலும், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா மருத்துவர்களுக்கு …ரெயின்கோட், ஹெல்மெட் தற்காப்பு உபகரணங்கள் பற்றாக்குறை !