யுக்ரேன் தலைநகர் கீவில் சில பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக, செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று, வெள்ளிக்கிழமை அதிகாலையில் மத்திய கீவில் இரு பெரிய குண்டு வெடிப்புகளையும், மூன்றாவதாக தூரத்தில் பெரிய குண்டு வெடிப்பையும் கேட்டதாக, அந்நகரில் உள்ள சிஎன்என் குழு தெரிவித்துள்ளது.
இரு குண்டு வெடிப்புகளை கேட்டதாக, உள்துறை முன்னாள் துணை அமைச்சர் ஆன்டன் ஹெராஷ்சென்கோ கூறியுள்ளதாக, யுக்ரேனின் யூனியன் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், தாழ்வாகவும் குறைந்த வேகத்திலும் பறந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து யுக்ரேன் ராணுவம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.