Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் 2019: பிபிசி-யின் வாய்ஸ் ஆக்டிவேட்டட் புல்லட்டின்!!

தேர்தல் 2019: பிபிசி-யின் வாய்ஸ் ஆக்டிவேட்டட் புல்லட்டின்!!
, ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (17:58 IST)
பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் 2019 பொதுத் தேர்தல்களில் வாய்ஸ் ஆக்டிவேட்டட் புல்லட்டின் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேலும் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.


 
 
இந்த புல்லட்டின், சேட் தொழில்நுட்பம் மற்றும் தினசரி உண்மை செய்தி சோதனைகளை போல இதுவும் நடைபெறும். இந்த சிறப்பு திட்டம் பிபிசியின் இந்திய மொழியில் இடம்பெறும். குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய ஆறு மொழிகள். 
 
இந்தியா முழுவதும் உள்ள பிபிசி நியூஸ் பத்திரிகையாளர்கள் ஆறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பாரபட்சமின்றி, சுயதீனமான ஆழமான கவரேஜ், சிறப்பு நேர்காணல்கள் மற்றும் நிபுணர்களின் பகுப்பாய்வு ஆகியவற்றை ஆய்வு செய்யும். 
 
குறிப்பாக தேர்தல், இந்தியாவின் எதிர்கால வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் தேர்தல் மீதான அவர்களின் தொலைநோக்கு பார்வை போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.
 
தேர்தல் முழுவதும், பிபிசி வாக்களிக்கும் போக்குகளை மிகவும் கவனமாக கண்காணித்து அனைவரிடமிருந்தும் நுண்ணறிவைக் கொண்டு வருகிறது. விவசாய நெருக்கடி இருந்து சமூக குற்றங்கள் வரை அனைத்தையும் கவனமாக கண்காணிக்கவுள்ளது. 
 
பிபிசி வேர்ல்ட் நியூஸ் மற்றும் பிபிசி.காம் கட்சிகளின் பிரச்சாரத்தையும், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, தேசியவாதம், கிராமப்புற வாக்கெடுப்பு, மதம், இளம் தலைமுறையினரின் வாக்கு  வாக்காளர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை உட்பட அனைத்து முக்கிய தலைப்புகளை பற்றியும் கவனம் செலுத்தவுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலினின் கனவு நிறைவேறாது - முதல்வர் பழனிசாமி