அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர். சேலத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடியார் ஸ்டாலின் கனவு நிறைவேறாது என்று தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத்தான் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி உள்ளோம். தமிழகத்தில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வரவிருக்கிறது. அதிமுக அரசு விவசாயத்திற்கு முன்னுரிமை தரும் அரசு. தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தேர்தல் முடிந்து ரூ. 2000 உதவி தொகை அளிக்கப்படும். வருகிற சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அதிமுக கூட்டணி வெற்றிபெரும்.
மக்களவை, சட்டசபை தேர்தலில் நூறுக்கு நூறு சதவீதம் அதிமுக வெற்றிபெரும். கோதாவரி, காவிரி நதிநீர் திட்டத்தினால் சேலம் மாவட்டம் செழிக்கும்.
வரும் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைக்கிறார். அவரது கனவு நிறைவேறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.