Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் வீசப்போகும் வெப்ப அலை: எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

அமெரிக்காவில் வீசப்போகும் வெப்ப அலை: எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள்!
, சனி, 20 ஜூலை 2019 (09:51 IST)
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதியில் மிகக் கடுமையான வெப்பமிகுந்த வானிலை நிலவ ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அதே சமயம், இந்த வார இறுதியில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், கிழக்கு கடற்கரையில் இருக்கும் போஸ்டன் மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வசிக்கும் 200 மில்லியன் மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படலாம்.
 
சில இடங்களில், 38 டிகிரி செல்சியஸுக்கு நெருக்கமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ வெப்பம் பதிவாகலாம். அமெரிக்கா மட்டுமின்றி, கனடாவின் சில பகுதிகளும் வெப்ப அலையால் தாக்கப்பட உள்ளது.
 
சமீப ஆண்டுகளில், அடிக்கடி நிகழும் வெப்ப அலையை காலநிலை மாற்றத்தோடு வல்லுநர்கள் ஒப்பிடுகின்றனர். புதிய தரவுகளின்படி, உலகளவில் பதிவான சராசரி வெப்பநிலை 16.4 செல்சியஸ் டிகிரியாக இருக்கிறது. மேலும், இந்த ஆண்டின் அதிக வெப்பம் ஜூன் மாதம் பதிவாகியுள்ளது.
 
இந்த மாத தொடக்கத்தில், ஆர்க்டிக் பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்கா மாகாணம் அலாஸ்காவில் அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உனக்கு என்ன தகுதி இருக்கு? வாய்விட்டவர்களுக்கு பதிலடி கொடுத்த சூர்யா!!