Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாறு காணாத சரிவு: டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 80ஐ கடந்தது

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (22:34 IST)
டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, சாமானியர்களின் பாக்கெட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்
 
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. செவ்வாய்கிழமையன்று முதல் முறையாக ஒரு டாலரின் மதிப்பு 80 ரூபாயை தாண்டியுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சில காலமாக அரசை தாக்கி வருகின்றன.
 
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியிடம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சமீபத்தில், ட்விட்டரில் ஒரு வரைபடத்தை (graph) பகிர்ந்த ராகுல் காந்தி, பழைய அறிக்கை ஒன்றை பிரதமருக்கு நினைவுபடுத்தினார். நரேந்திர மோதி குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தின் அறிக்கை இது.
 
"நாடு விரக்தியில் மூழ்கியுள்ளது" என்று கூறியது நீங்கள்தானே என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்."அந்தக் காலத்தில் இது குறித்து எவ்வளவு சத்தம் போட்டீர்களோ, இன்று ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டு அந்த அளவிற்கு 'மௌனமாக' இருக்கிறீர்கள்'என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
பிரதமர் நரேந்திர மோதியின் அந்த அறிக்கையின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
 
 
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரிநேத்தும் அரசை கடுமையாகத்தாக்கினார். "ரூபாய் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் சரிந்துவரும் பொருளாதாரம் மற்றும் கட்டுப்பாடற்ற பணவீக்கம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் அவர்.
 
நிலைமையை அரசும் அறிந்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரிசர்வ் வங்கி, ரூபாயின் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. நாணய மாற்று விகிதம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது," என்றார்.
 
ஆனால் இது ஏன் நடக்கிறது? டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ஏன் வீழ்ச்சியடைகிறது மற்றும் ரூபாயின் மதிப்பை என்ன காரணிகள் தீர்மானிக்கின்றன?
 
டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, சாமானியர்களின் பாக்கெட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்
இப்போது நீங்கள் ஒரு டாலர் வாங்க விரும்பினால், அதற்கு 79 ரூபாய் செலுத்த வேண்டும். இது தொழில்நுட்ப மொழியில் நாணய மாற்று விகிதம் எனப்படும்.
 
ரூபாய்-டாலரைத் தவிர, மற்ற நாணயங்களுக்கு இடையிலும் இதுபோன்ற விற்றல்-வாங்கல் நடைபெறுகிறது.
 
பொருளாதார மந்தநிலை எனும் 'பேய்' வரப்போகிறதா?: எச்சரிக்கும் சமிக்ஞைகள்
 
உலகின் பல்வேறு நாடுகளுக்கு அவற்றின் சொந்த நாணயம் உள்ளது. அதாவது பிரிட்டனின் கரன்சி பவுண்ட், மலேஷியாவின் ரிங்கெட் போல. எனவே யாராவது பிரிட்டனில் இருந்து ஏதாவது வாங்க அல்லது வணிகம் செய்ய அல்லது அங்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அதற்கு அவர்களுக்கு பிரிட்டிஷ் நாணயம் அதாவது பவுண்ட் தேவைப்படும். அவர்கள் பவுண்டுகளை வாங்க வேண்டும்.
 
 
 
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
 
ரூபாய் அல்லது வேறு எந்த நாட்டின் நாணயத்தையும் செலுத்தி, தனக்கு தேவைப்படும் நாணயத்தை பெறுவது நாணய மாற்று விகிதம் எனப்படுகிறது.
 
டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, சாமானியர்களின் பாக்கெட்டில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்
 
நாணய வர்த்தகம் செய்யப்படும் இடம், அந்நியச் செலாவணி சந்தை அல்லது பணச் சந்தை என்று அழைக்கப்படுகிறது.
 
மாற்று விகிதம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அது மாறிக்கொண்டே இருக்கும். 2022 ஜூலையில் பவுண்டுக்கு செலுத்த வேண்டிய தொகை, டிசம்பரிலும் அப்படியே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
 
இது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ஆகலாம். இது ஒரு நாணயத்தின் தேவை மற்றும் சப்ளையை பொருத்து இருக்கும்.
 
ஒரு நாணயத்திற்கான தேவை அதிகமாக இருந்தால், அதன் மதிப்பு அதிகமாக இருக்கும். இப்போது உலகின் பெரும்பகுதி அமெரிக்க நாணயமான 'டாலரில்' வணிகம் செய்வதால், பணச் சந்தையில் எப்போதும் டாலர்களுக்கான தேவை உள்ளது.
 
இப்போது உங்களுக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ ஏதேனும் நாணயம் தேவைப்படுகிறது அல்லது ஏதேனும் நாணயத்தை விற்க வேண்டியிருக்கிறது என்றால் எங்கே செல்லவேண்டும்? அதற்கான பதில் வங்கி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments