Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.8 லட்சம் கோடி சரிவை கண்ட அதானியின் ராஜ்ஜியம் - மீண்டு வருவது சாத்தியமா?

Advertiesment
இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதே இருக்காது
, வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:07 IST)
இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானி, தனது ஃஎப்.பி.(FPO) பங்கு விற்பனையை நிறுத்தியதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க முயன்றார்.

இந்த விற்பனை மூலம் திரட்டப்பட்ட 2,000 கோடி ரூபாயை(2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தருவதாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.

இந்த முடிவு "தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை" பாதிக்காது என்று அதானி தெரிவித்திருந்தார்.

தொடர் சரிவில் அதானி குழுமம்

அமெரிக்க பங்குச் சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டை அதானி மறுத்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 8.8 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதானி அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 3.9 லட்சம் கோடி) இழந்து, இப்போது ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் 22வது இடத்தில் உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பட்டியலில் 3வது இடத்திலும் நேற்று 16வது இடத்திலும் கௌதம் அதானி இருந்தார்.

என்ன நடந்தது?

அதானி குழுமம் பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும் கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்டது.

இதற்குப் பதிலளித்த அதானி குழுமம், “தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது, ஒன்றைவிட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டது,” என்று கூறியிருந்தது.

நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதானி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதானி குழுமத்தின் கீழ் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் ஏழு வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகி்ன்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் பதிவு செய்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்துள்ளன.

அதானி குழுமத்தில் பல இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. சில வங்கிகள் பல லட்சம் கோடி ரூபாயை கடனாக அதானி குழும நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை அறிக்கையாக சமர்பிக்குமாறு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
webdunia

அதானி குழுமத்தின் பங்குகளின் வீழ்ச்சி தொடர்பாக இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) விசாரணை நடத்தி வருவதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சரிவில் இருந்து எப்போது மீளும்?

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் அதானி நிறுவனத்தின் போக்கு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகரான சதீஷ், அதானி நிறுவனத்தின் பங்குகளில் 20% வரை பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன.

பங்குச் சந்தையின் வீழ்ச்சி காரணமாகவும், வெளியில் இருந்து எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாகவும் தங்கள் பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டிய நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டன. இதன் காரணமாகவும், அதானி நிறுவனம் தனது ஃஎப்.பி.ஓ-வை திரும்பப் பெற்றதன் காரணமாகவும் அதானி எண்டர்பிரைஸ் நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே வருகின்றன.

இதன் தாக்கம் சில்லறை முதலீட்டாளர்களிடம் தொடர்கிறது. அதானி குழுமத்தில் முதலீடு செய்த பணத்தைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது சிக்கலானது என்று கூறினார்.

இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் நம்பிக்கை மிகுந்தவையாகவும், ஒட்டுமொத்த பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்தது.

ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட விளைவைத் தடுக்கும் வகையில் சந்தையில் இழந்த நம்பிக்கையைப் பெறும் விதமாக அதானி தனது நிறுவனத்தின் ஃஎப்.பி.ஓ-வை திரும்பப் பெற்றாலும், சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன.

இதற்கு முக்கியக் காரணம், அந்த நிறுவனம் பெற்றுள்ள கடன்கள் தான். மொத்த கடனில், 25% பொதுத்துறை வங்கிகளிடம் இருந்தும், 37% பொதுத்துறை காப்பீடு நிறுவனம், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் பத்திரங்களாக உள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையில் அதானி குழுமத்திற்கு இருக்கும் அதிக கடன்களைச் சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், சந்தையில் அந்த நிறுவனத்தின் மீது எதிர்மறை தாக்கம் ஏற்படும்போது பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தது. அதே போலத்தான் இப்போது நடந்து வருகிறது," என்று தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுவானில் எஞ்ஜினில் இருந்து வந்த புகை.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்..!