நடுவானில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமான என்ஜினியிலிருந்து புகை வந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திடீரென நடுவானில் இன்ஜினியிலிருந்து புகை வந்ததாக கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து அந்த விமானம் அபுதாபியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. 184 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் 1000 ஆடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான என்ஜினியிலிருந்து புகை வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அபிராமி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பயணிகள் அனைவரும் மாற்று விமான மூலம் கோழிக்கோடு புறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.