ஆண்ட்ரோமெடா விண்மீன் மண்டலத்திற்கு அடுத்ததாக இருக்கும் ஒரு பெரிய பிளாஸ்மா ஆர்க்கின் புகைப்படம் இந்த ஆண்டுக்கான பெருமதிப்புடைய வானியல் புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளது.
மார்செல் ட்ரெக்ஸ்லர், சேவியர் ஸ்ட்ரோட்னர் மற்றும் யான் செயின்டி ஆகியோல் தலைமையிலான அமெச்சூர் வானியலாளர்கள் குழு, இந்த பிரபஞ்ச அதிசயமான, ஆச்சரியமான நிகழ்வைப் படம்பிடித்தது.
வானியல் விஞ்ஞானிகள் இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத வாயு மேகத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
இது பிரபஞ்சத்தின் அருகாமையில் உள்ள மிகப்பெரிய வானியல் அமைப்பாக இருக்கலாம்.
வானியல் புகைப்படப் போட்டி நீதிபதியும் வானியற்பியல் நிபுணருமான லாஸ்லோ ஃபிரான்சிக்ஸ், அந்தப் படம் எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்ததோ அதே அளவு கண்கவரும் விதத்திலும் இருந்தது என்று கூறினார்.
"இந்தப் படம் ஆண்ட்ரோமெடாவை ஒரு புதிய வழியில் வழங்குவது மட்டுமல்லாமல், வானியல் புகைப்படக் கலையின் தரத்தை உயர் மட்டத்திற்கு உயர்த்துகிறது," என்று அவர் கூறினார்.
ஆண்ட்ரோமெடா விண்மீன் மண்டலத்திற்கு அடுத்ததாக இருக்கும் ஒரு பெரிய பிளாஸ்மா ஆர்க்கின் புகைப்படம் முதல் பரிசைப் பெற்றது.
லண்டனில் உள்ள ராயல் கிரீன்விச் ஆய்வகம், ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படக் கலைஞர் போட்டியை நடத்துகிறது. மேலும் இரண்டு 14 வயது சீன சிறுவர்களுக்கு இந்த ஆண்டின் இளம் வானியல் புகைப்படக் கலைஞர் விருதையும் வழங்கியுள்ளது.
ரூம்வீ க்ஸ்யூ மற்றும் பின்யு வாங் ஆகியோர் இணைந்து, பூமியில் இருந்து 6,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சென்டாரஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள, ஐசி 2944 என வகைப்படுத்தப்பட்டுள்ள ரன்னிங் சிக்கன் நெபுலாவின் இந்தக் காட்சியைப் படம் பிடித்தனர்.
நெபுலாவின் ஒளிரும் வாயுவில் பொதிந்துள்ள, கோலைண்டெர் 249 நட்சத்திரக் கூட்டத்தை இப்படத்தில் காணலாம்.
தி ரன்னிங் சிக்கன் நெபுலா - இந்த ஆண்டின் இளம் வானியல் புகைப்படக் கலைஞரின் வெற்றிப் புகைப்படமாக அறிவிக்கப்பட்டது.
ஒரு நீதிபதி மற்றும் தொழில்முறை வானியலாளராக இருக்கும் யூரி பெலெட்ஸ்கி, இது ஒரு அற்புதமான அழகின் படம் என்று விவரித்தார்.
"புகைப்படக் கலைஞர்கள் நெபுலாவின் துடிப்பான வண்ணங்களையும், உட்பொதிக்கப்பட்ட நட்சத்திரக் கூட்டத்தையும் அழகாகக் காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது."
இந்த ஆண்டின் இளம் வானியல் புகைப்படக் கலைஞர் விருது 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானது.
உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்ற 4,000-க்கும் மேற்பட்ட படங்களை நீதிபதிகள் ஆய்வு செய்து பரிசுக்குரிய படங்களைத் தேர்வு செய்தனர்.
இந்தப் படங்கள் லண்டனில் உள்ள தேசிய கடல்சார் அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை முதல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நார்வேயின் லோஃபோடென் தீவுகளில் உள்ள ஸ்காக்சாண்டன் கடற்கரையில் பிரதிபலித்த துருவ ஒளியின் படமும் இப்போட்டியில் பங்கேற்றது.
வெற்றி பெற்ற மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட வேறு சில படங்கள்
ஆண்ட்ரியாஸ் எட்டலின் இந்தப் படம் நார்வேயின் லோஃபோடென் தீவுகளில் உள்ள ஸ்காக்சாண்டன் கடற்கரையில் பிரதிபலித்த துருவ ஒளியைக் காட்டுகிறது.
பின்னணியில் உள்ள மலை ஹஸ்டிண்டன் ஆகும், இது விடியல் சூழ்ந்ததாகத் தெரிகிறது.
செவ்வாய் கோளை சந்திரன் மறைத்தபோது, இரண்டு கோள்களையும் ஈதன் சேப்பல் என்பவர் படம்பிடித்தார்.
டிசம்பர் 8, 2002 அன்று சந்திரனால் செவ்வாய் கோள் மறைக்கப்பட்டிருந்ததை ஈதன் சேப்பல் என்பவர் படம் பிடித்தார். அவர் அமெரிக்காவின் உள்ள டெக்சாஸில் உள்ள சிபோலோவில் இருந்து இந்தக் காட்சியைப் பதிவு செய்தார்.
அப்படி மறைக்கப்பட்டபோது, சந்திரன் செவ்வாய் கிரகத்தின் முன் சென்றது. அந்த நேரத்தில் ஈதன் சேப்பல் இரண்டு கோள்களையும் ஒன்றாகக் காட்சிப்படுத்த முடிந்தது.
சந்திரனின் தெற்கு முகத்திற்குப் பின்னால் செவ்வாய் கோளை பிரமிப்பூட்டும் வகையில் இப்படம் காட்டுகிறது.
நட்சத்திரங்கள் மற்றும் நெபுலாஸ் பிரிவில் இந்தப் படம் தான் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட படமாக உள்ளது.
ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் இருந்து எடுக்கப்பட்ட இந்தப் படம், ஓநாய் நெபுலா அல்லது ஃபென்ரிர் நெபுலா எனப்படும் தடிமனான, இருண்ட, ஓநாய் வடிவ மூலக்கூறு மேகத்தைக் காட்டுகிறது.
புகைப்படக் கலைஞர் ஜேம்ஸ் பாகுலே, ஹைட்ரஜன் வாயுவின் அடர்த்தியான பின்னணியான அழகான சிவப்பு நிறத்தைக் காட்டுவதற்காகவே நட்சத்திரமில்லாத வான்பகுதியைத் தேர்ந்தெடுத்துப் படம் பிடித்தார்.
எஜுவார்டோ ஷாபெர்கெர் பௌப்பியூ சூரியனின் இந்தக் காட்சியை படத்தை அர்ஜென்டினாவின் சாண்டா ஃபேவில் உள்ள ரஃபேலாவில் இருந்து படம்பிடித்தார்.
எஜுவார்டோ ஷாபெர்கெர் பௌப்பியூ சூரியனின் இந்தக் காட்சியை படத்தை அர்ஜென்டினாவின் சாண்டா ஃபேவில் உள்ள ரஃபேலாவில் இருந்து படம்பிடித்தார்.
இப்படத்தில் ஒரு கேள்விக்குறியின் வடிவத்தில் ஒரு பெரிய இழை காட்டப்பட்டுள்ளது.
சூரிய இழைகள் சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள பிளாஸ்மாவின் வளைவுகள் ஆகும். அவை காந்தப்புலங்களால் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், அந்தப் படம் இரண்டு பேனல் மொசைக் படம் ஆகும்.
வளிமண்டலத்தில் மிகவும் அரிதாக நிகழும் ஒரு காட்சியும் இப்போட்டியில் பங்கேற்றது.
ஸ்ப்ரிட்ஸ் அல்லது "ரெட் ஸ்பெக்டர்ஸ்" என்பது வாணவேடிக்கை போல தோற்றமளிக்கும் வளிமண்டல ஒளிர்வின் மிகவும் அரிதான நிகழ்வு ஆகும்.
ஏஞ்சல் ஆன் இந்த புகைப்படத்தை இமயமலைப் பகுதியில் மலைகளின் உயரமான முகடான பூமா யம்கோ (திபெத்) ஏரியில் இருந்து படம் பிடித்தார்.
ஒரு பொதுவான உறைக்குள் ஒரு ஜோடி நட்சத்திரங்களைக் கொண்ட முன்னர் அறியப்படாத விண்மீன் நெபுலாவை இந்தக் காட்சி காட்டுகிறது.
நடுவர் மன்றத்தின் விருப்பமான படங்களில் இடம்பிடித்த மற்றொன்று மார்செல் ட்ரெஷ்ஸ்லரின் படம்.
ஒரு பொதுவான உறையால் சூழப்பட்ட ஒரு ஜோடி நட்சத்திரங்களைக் கொண்ட முன்னர் அறியப்படாத விண்மீன் நெபுலாவைக் காட்சிப்படுத்தியுள்ளது என்பதுடன், வெற்றிகரமான படங்களின் வரிசையில் மற்றுமொரு அற்புதமான காட்சியைச் சேர்த்துள்ளது.
25, 2008 அன்று கரை ஒதுங்கி, இன்னும் நல்ல நிலையில் உள்ள ஜீலா என்ற படகு.
நமீபியாவின் அட்லாண்டிக் கடற்கரையின் வடக்குப் பகுதியானது உலகின் மிகவும் துரோகமான கடற்கரைகளில் ஒன்றாகும். மேலும் இது எலும்புக்கூடு கடற்கரை என்ற பெயரைப் பெற்றது.
இந்த புகைப்படத்தில் உள்ள படகு, ஜீலா, ஆகஸ்ட் 25, 2008 அன்று கரை ஒதுங்கியது என்பது மட்டுமல்லாமல் இன்னும் நல்ல நிலையில் உள்ளது.
விகாஸ் சந்தர் எடுத்த படம், சிதைவுக்கு மேலே வானத்தில் உள்ள பல்வேறு வகையான நட்சத்திரங்களின் மென்மையான வண்ணங்களைக் காட்டுகிறது.
வியாழன் கோள், நிலநடுக்கோட்டைக் கடந்த 30 நிமிடங்களுக்குப் பிறகு, சிங்கப்பூரிலிருந்து மார்கோ லோரென்சி என்பவர் படம் பிடித்தார்.
வியாழனின் படம், நிலநடுக்கோட்டைக் கடந்த 30 நிமிடங்களுக்குப் பிறகு, சிங்கப்பூரிலிருந்து மார்கோ லோரென்சியால் எடுக்கப்பட்டது.
பெரிய சிவப்பு புள்ளி மற்றும் கொந்தளிப்பான வளிமண்டலத்தின் பல விவரங்கள், முக்கியமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் மற்றும் பல சிறிய புயல்கள் ஆகியவை இப்படத்தில் தெளிவாகத் தெரிகின்றன.
ஆரோன் வில்ஹெல்மின் படம் 70 மணிநேர தரவுகளை உள்ளடக்கியது என்பதுடன் இப்படத்தை நாம் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஏதோ ஒரு புதிய விஷயம் நம் கண்களுக்குத் தெரிகிறது.
Sh2-132 வளாகம் செஃபியஸ் (Cepheus) மற்றும் லேசெர்டா (Lacerta) விண்மீன்களுக்கு இடையே உள்ள எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது என்பதுடன் பல ஆழமான-வான் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. அதாவது பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள மங்கலாகத் தெரியும் வானியல் பொருள்கள்.
ஆரோன் வில்ஹெல்மின் புகைப்படம், 70 மணிநேர தரவுகளை உள்ளடக்கியது என்பது மட்டுமல்லாமல், அனைத்து வாயுக்களின் செழுமையான தொடர்பானது நாம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ஏதோ ஒன்றைக் காட்டுகிறது.
நாசாவின் சந்திரா சோனிஃபிகேஷன் திட்டத்தில் (நாசா சந்திரா எக்ஸ்ரே அப்சர்வேட்டரி, மே 2022) ஆடியோ கருவிகளைப் பயன்படுத்தி, பெர்சியஸ் விண்மீனின் மையத்தில் அமைந்துள்ள கருந்துளையின் ஒலியை ஜான் ஒயிட் என்பவர் படம்பிடித்தார்.
ஸ்பீக்கர் மூலம் பிளே செய்யப்பட்ட அந்த ஒலியுடன் கீழே கருப்பாக்கப்பட்ட, சுமார் 3 மிமீ தண்ணீர் நிரப்பிய பெட்ரி தட்டு ஒன்றை ஒயிட் இணைத்தார்.
ஒரு இருண்ட அறையில் ஒரு மேக்ரோ லென்ஸ் மற்றும் ஒளியின் ஒளிவட்டத்தைப் பயன்படுத்தி, திரவத்தில் உருவாகும் வெவ்வேறு வடிவங்களை ஆராய்வதற்காக ஒயிட் ஆடியோ மற்றும் தொகுதிகளுடன் பரிசோதனை செய்தார்.